- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமரனை போலவே ரசிகர்களால் கொண்டாடப்படும் லக்கி பாஸ்கர், 5 நாட்களில் வசூலித்தது இத்தனை கோடிகளா? ஜாக்பாட்...

அமரனை போலவே ரசிகர்களால் கொண்டாடப்படும் லக்கி பாஸ்கர், 5 நாட்களில் வசூலித்தது இத்தனை கோடிகளா? ஜாக்பாட் அடித்த நடிகர் துல்கர் சல்மான்!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் ஜாலியான காமெடி கலந்த காதல் படங்களில் நடித்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ, ரஜினி முருகன், மான் கராத்தே, காக்கி சட்டை போன்ற படங்கள் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. அதே நேரத்தில் வேலைக்காரன் படத்தில் அழுத்தமான நடிப்பை தந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

வெற்றிப் பாதையில் பயணித்த சிவகார்த்திகேயனுக்கு ஹீரோ, டான், மிஸ்டர் லோக்கல் போன்ற சில படங்கள் மிகப்பெரிய தோல்வியை தந்தன. அதே போல் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட அயலான் படமும் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை தராமல் ஏமாற்றத்தை தந்தது. அதே நேரத்தில் மாவீரன் படத்தின் சிவகார்த்திகேயன் நடிப்பு அடுத்த லெவலுக்கு சென்றது.

- Advertisement -

இந்த சூழலில் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள அமரன் படம், பெரிய அளவில் சிவகார்த்திகேயனுக்கு வெற்றியை, வரவேற்பை, பெயரை, புகழை பெற்றுத் தந்திருக்கிறது. இந்த படத்தின் வெற்றி, இதுவரை சிவகார்த்திகேயனுக்கு கிடைக்காத ஒரு அபார வெற்றியாக கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள், நிச்சயமாக நடிகர் விஜய் விட்டுச் சென்ற இடங்களை பிடிக்கும் படங்களாக அமையும். எதிர்காலத்தில் விஜயை கடந்து அடுத்த நிலைக்கு போகும் அளவுக்கு சிவகார்த்திகேயனின் தீவிர முனைப்பும், உழைப்பும் அமரன் படத்தில் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே இந்த படம் 77 கோடி ரூபாயை வசூலில் கடந்துள்ளது.

- Advertisement -

அதே போல் அமரன் படம் போலவே, தீபாவளி ரிலீஸாக மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் என்ற தெலுங்கு படம், தமிழில் வெளியானது. இந்த படம், மிக வித்யாசமான கதைக்களத்தில் உருவான படமாகவும், பணத்தை மையக் கருவாக கொண்டும் எடுக்கப்பட்ட படமாகவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அமரனை போலவே, லக்கி பாஸ்கர் படம் துல்கர் சல்மானுக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அவரது கேரியரில் அமைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படம் ரிலீஸாகி 5 நாட்கள் ஆன நிலையில் உலகம் முழுவதும் 58 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இன்னும் சில நாட்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டி விடும் என்றும் உறுதியாக நம்பப்படுகிறது. ஏனெனில் பாசிட்டிவ் விமர்சனங்களால் இந்த படத்துக்கு ரசிகர் கூட்டம் குறையாமல் இருந்து வருகிறது.

- Advertisement -

சற்று முன்