- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவர்களை பார்த்தால் ஒரு பக்கம் சோகமாகவும் காமெடியாகவும் இருக்கிறது - மூத்த நடிகரை கலாய்த்த ஜெயிலர்...

அவர்களை பார்த்தால் ஒரு பக்கம் சோகமாகவும் காமெடியாகவும் இருக்கிறது – மூத்த நடிகரை கலாய்த்த ஜெயிலர் பட நடிகர் விநாயகன்!

- Advertisement -

கடந்த 2023ம் ஆண்டில் ஜெயிலர் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு படத்தின் ஹீரோ நடிகர் ரஜினிகாந்த் படத்தின் இயக்குனர் நெல்சன் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு அந்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறன் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ கார்களை பரிசாக வழங்கினார். இந்த லிஸ்ட்டில் முதலில் வர வேண்டிய பெயரே ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் விநாயகன்தான் என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்திருந்தனர்.

அந்தளவுக்கு அந்த படத்தில் விநாயகன் நடிப்பு வேற லெவலில் இருந்தது. இவர் ஏற்கனவே சிம்பு நடித்த சிலம்பாட்டம் விஷால் நடித்த திமிரு தனுஷ் நடித்த மரியான் ஙபோன்ற படங்களில் நடித்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள படங்களில் இவரது வில்லன் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

- Advertisement -

சிறந்த திரைக்கலைஞராக உள்ள நடிகர் விநாயகன் அடிக்கடி தேவையற்ற சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அவரது மது போதை பழக்கமும், அடிக்கடி கோபப்படும் சுபாவமும் அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அடிக்கடி இழுத்துச் சென்று விடுகிறது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் நடிகர் விநாயகன் ஒரு பதிவை செய்திருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, யார் முழுவதும் குடிக்கு அடிமையாக இருக்கிறார்களோ யார் தங்களது குடிப்பழக்கத்தால் உடல் ரீதியாக ரொம்பவும் பலவீனப்பட்டு எழுந்து நிற்கவே 4 பேரின் உதவி தேவைப்படும் நிலையில் இருக்கிறார்களோ அப்படிப்பட்டவர் போதை பொருட்களை பயன்படுத்தாதீர்கள் என்று பொது மேடையில் லெக்சர் எடுப்பதை பார்க்கும்போது ஒரு பக்கம் காமெடியாகவும் சோகமாகவும் இருக்கிறது. இதுபோன்ற சடலங்களை மேடைக்கு கொண்டு வராதீர்கள்.

- Advertisement -

ஆல்கஹால் கஞ்சா அல்லது பெண் எல்லாமே போதை தான். சொந்தமாக நிற்க முடியாமல் டெக்னாலஜி பற்றி எந்த புரிதலும் இல்லாமல் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்கிறீர்களா? தங்களது குழந்தைகளை சினிமாவின் வலுக்கட்டாயமாக தள்ளி பணம் சம்பாதிப்பதும் ஒரு வித போதைக்கு அடிமையான விஷயம்தான். நீங்கள் உங்கள் வாழ்க்கையின் முடிவில் இருந்தால் பேசாமல் வீட்டுக்கு போய் அமைதியாக இருந்து அங்கேயே உயிரை விடுங்கள் என்று அந்த பதிவில் நடிகர் விநாயகன் கூறியிருக்கிறார். இப்படி ஒரு பதிவை நடிகர் விநாயகன் எழுத காரணம் மூத்த நடிகர் ஒருவர்தான் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் சீனியர் நடிகரான சீனிவாசன் ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்டு பேசிவிட்டு நடந்து செல்லும் போது திடீரென தடுமாறி விழுந்தார். அவரை சிலர் உடனடியாக தாங்கிப் பிடித்தார்கள். சில வருடங்களுக்கு முன்பு சீனிவாசன் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதற்கு அவருடைய மதுப்பழக்கமும் காரணம் என்று சொல்லப்பட்டது. தற்போது அவர் மதி பழக்கத்துக்கு எதிராக மேடைகளில் பேசி வருகிறார். விநாயகன் அவர் மீதுதான் இப்படி ஒரு குற்றச்சாட்டை மறைமுகமாக வைத்து இந்த பதிவை வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்