தமிழ் சினிமாவை பொருத்த வரை ஹீரோக்களுக்காக படம் உருவாக்குகிறார்களே தவிர கதைக்கான ஹீரோக்களை எந்த இயக்குனரும் தேடுவது இல்லை. ஆனால் மலையாள சினிமாவில் அன்று முதல் இன்று வரை கதைக்கு தான் ஹீரோவே தவிர ஹீரோவுக்கு என எந்த கதையும் அவர்கள் எழுதுவது இல்லை. இதுதான் மலையாள சினிமாவின் சக்சஸ் பார்மூலா.அதனால் மலையாளத்தில் வரும் பல படங்கள் ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெறுகின்றன.
தமிழ் சினிமா இன்னும் மாறாமல் இருப்பதால் தான் நல்ல படங்கள் என்பதே வெகுவாக குறைந்து போய் விட்டது. இந்த நிலை எப்போதுமே மாறுமோ அப்போதுதான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சிறந்த படங்கள் காணும் வாய்ப்பு திரையரங்குகளில் உருவாகும். அதனால் தான் மம்முட்டி மோகன்லால் சுரேஷ் கோபில் திலீப் பிருத்விராஜ் போன்ற பல மலையாள ஹீரோக்கள் தமிழ் சினிமாவில் நடிப்பதை பெரும்பாலும் தவிர்க்கின்றனர்.
மலையாள சினிமாவில் மூத்த எழுத்தாளர் மற்றும் 86 வயதான இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன். 86 வயதிலும் தற்போது அவர் இயக்கி வரும் படம் தான் பட யாத்ரா. இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் மம்முட்டி நடித்து வருகிறார். கேரளாவில் பல்வேறு இடங்களில் படயாத்ரா சூட்டிங் தொடர்ந்து வேகமாக நடந்து வருகிறது.
பட யாத்ரா படத்தில் நடிகர் மம்முட்டி டாக்டர் கேரக்டரில் நடிக்கிறார். ஆனால் இது வழக்கமான டாக்டர் கேரக்டர் இல்லை. பெரிய நகரங்களில் உள்ள மல்டிபில் தனியார் மருத்துவமனைகளில் அவருக்கு பணி வாய்ப்பு அதிகமாக இருந்தும் சம்பளம் லட்சக்கணக்கில் கொடுக்க முன்வந்தும் அதை எல்லாம் மறுத்துவிடுகிறார்.
மருத்துவ சேவை செய்வதற்காக பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமப் பகுதிக்கு சென்று அங்குள்ள ஒரு சிறிய வீட்டில் கிளினிக் நடத்தி நோய்வாய்ப்பட்ட மக்களை குணப்படுத்தும் ஒரு எளிமையான டாக்டராக இந்த படத்தில் மம்முட்டி நடித்திருக்கிறார். இதில் நோயாளிகளிடம் அவர்களால் முடிந்த பணத்தை உண்டியலில் போடுமாறு சொல்லும் ஒரு கேரக்டரில் மம்முட்டி வருகிறார்.
தமிழ்நாட்டில் 5 ரூபாய் டாக்டர் என அழைக்கப்பட்டவர் சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த டாக்டர் ஜெயச்சந்திரன். இந்த கேரக்டரில் ஏற்கனவே கத்தி படத்தில் நடிகர் விஜய் நடித்திருந்தார். இப்போது விஜய் நடித்த அதே போன்ற டாக்டர் கேரக்டரில் நடிகர் மம்முட்டி மலையாளத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





