- Advertisement -
Homeபொழுதுபோக்குபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போவது இவர்தானா? உறுதியாக வெளியான தகவல் -...

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போவது இவர்தானா? உறுதியாக வெளியான தகவல் – அப்போ அவருக்குதான் கப்பு கிடைக்கும் போல…

- Advertisement -

கடந்த 7 ஆண்டுகளாக விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்த முறை ஏஐ தொழில்நுட்ப பயிற்சிக்காக கமல் அமெரிக்கா சென்றுவிட்டதால், கமலுக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி துவங்கிய நிகழ்ச்சி இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. வீட்டுக்குள் போட்டியாளர்களாக வந்த பலர் வெளியேற்றப்பட்ட நிலையில், இப்போது 10 பேர் மட்டுமே வீட்டுக்குள் இருக்கின்றனர். இதில் நேரடியாக பைனலுக்கு செல்லும் டிக்கெட் பினாலே குறித்தும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

- Advertisement -

இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் சௌந்தர்யா மஞ்சரி பவித்ரா ரயான் அருண் பிரசாத் தீபக் ஜாக்குலின் ராணவ் முத்துக்குமரன் விஷால் என மொத்தம் 10 பேர் வீட்டுக்குள் போட்டியாளர்களாக டாஸ்க்குகளில் மிக தீவிரமாக விளையாடி வருகின்றனர். இன்னும் 2 வாரங்களில் இந்த பிக்பாஸ் 8வது சீசன் நிகழ்ச்சி இறுதிக்கு வருகிறது.

இந்நிலையில் இந்த வாரம் எலிமிசேன் செய்யப்பட்டவர்களில் யார் வீட்டை விட்டு வெளியேற போகிறார்கள் என்பதில் தொடர்ந்து சஸ்பென்ஸ் நீடித்து வந்தது. இறுதி வரை வரும் போட்டியாளர்களாக இருந்த அன்ஷிதா, ஜெப்ரி ஆகியோர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த வாரம் எலிமினேசன் செய்யப்பட்டவர்களாக தீபக் ரயான் மஞ்சரி மற்றும் பவித்ரா ஆகியோர் உள்ளனர். இதில் தீபக் அதிக வாக்குளை பெற்று முதலிடத்திலும் அதிக வாக்குகள் அடிப்படையில் ரயான் 2ம் இடத்திலும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதனால் மிக குறைந்த ஓட்டுகள் வாங்கியுள்ள மஞ்சரி முதலிலும், அவருக்கு சற்று அதிகமாக ஓட்டுகளை வாங்கியுள்ள பவித்ரா இரண்டாவதாகவும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எப்படியும் டைட்டில் வின்னர் இந்த முறை சௌந்தர்யா தான் என்பதில் மாற்றம் இல்லை என்ற தகவலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்