- Advertisement -
Homeபொழுதுபோக்குசூட்டோடு சூட்டாக சூட்டிங்கை முடித்த இயக்குனர் மாரி செல்வராஜ்... துருவ் விக்ரமின் பைசன் திரைப்படம் எப்போது...

சூட்டோடு சூட்டாக சூட்டிங்கை முடித்த இயக்குனர் மாரி செல்வராஜ்… துருவ் விக்ரமின் பைசன் திரைப்படம் எப்போது வருகிறது தெரியுமா…

- Advertisement -

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த வாழை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. தனது கிராமத்தில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார்.

வாழைத் தோட்டங்களில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளர்கள், லாரி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூலை வாரி குவித்தது.

- Advertisement -

இந்த திரைப்படம் கொடுத்த வெற்றியின் சுறுசுறுப்புடன் தனது அடுத்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ். இந்த முறை அவர் நடிகர் விக்ரமின் மகன் துருவ் உடன் இணைந்து பணியாற்றியுள்ளார். கர்ணன் திரைப்படத்தை முடித்த பிறகு இவர்கள் இருவரும் இணைவதாகதான் இருந்தது. ஆனால் அப்போது உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அவரின் கடைசி படம் என்பதால் மாமன்னன் படத்தை எடுத்துக் கொடுத்தார் மாரி செல்வராஜ்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட துருவ் விக்ரமின் படத்திற்கான சூட்டிங்கை முடித்து இருக்கிறார் மாரி செல்வராஜ். இந்த திரைப்படத்திற்கு பைசன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் சமீர் நாயர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

- Advertisement -

கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கிறார். இதுபோக ரஜிஷா விஜயன், லால், பசுபதி, கலையரசன், அழகம்பெருமாள் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளார்கள். இதற்கு முன்பாக சந்தோஷ் நாராயணன், ஏ ஆர் ரகுமான் உடன் பணிபுரிந்த மாரி செல்வராஜ் இந்த திரைப்படத்திற்காக நிவாஸ் கே பிரசன்னா உடன் இணைந்து இருக்கிறார்.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. கபடி விளையாட்டை மையப்படுத்தி இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் என்பவரின் பயணத்தை மையப்படுத்திதான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பைசன் திரைப்படம் வரும் மே மாதம் திரையரங்குகளில் வெளியாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்