சில இயக்குனர்கள் ஒரு படம் இயக்கினால் கூட அந்த படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் அவர்களுக்கு பெயர், புகழை பெற்றுத் தந்துவிடும். அது முதல் படத்திலேயே சிலருக்கு நடந்திருக்கிறது. ஏனெனில் அந்த படத்தின் கதை, திரைக்கதை, கதைக்களம், வசனங்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடும்.
அந்த வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்தில் நாயை குறியீடாக வைத்து, சாதிய வேறுபாடு குறித்த கருத்தை முன்வைத்த ஒரு படத்தை தந்திருந்தார். அந்த படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
தொடர்ந்து மாரி செல்வராஜின் இரண்டாவது படம் கர்ணன். தனுஷ் நாயகனாக நடித்த இந்த படத்திலும் போலீஸ் அடக்குமுறையால் ஏழை எளிய மக்களுக்கு நடக்கும் அடக்குமுறை, வன்முறையால் ஏற்படும் கொடுமைகளை இந்த படத்தில் மிக தத்ரூபமாக காட்டியிருந்தார் மாரி செல்வராஜ்,
அதன்பிறகு அவர் இயக்கிய 3வது படம் மாமன்னன், அதிகாரத்தில் இருந்தாலும் சாதிய அடக்குமுறையில் ரத்னவேலு பகத் பாசிலிடம் எம்எல்ஏ வடிவேலு ( மாமன்னன்) அடக்குமுறையில் சிக்கி அடிமையாக இருப்பதை மிக அற்புதமாக காட்டியிருந்தார் மாரி செல்வராஜ். இப்போது அவரது 4வது படம் வாழை பலதரப்பு மக்களிடம் பலத்த பாராட்டை பெற்று வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு நேர்காணலில் பேசுகையில், விஜய் படம் பார்க்கச் சென்ற போது தனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தை வெளிப்படையாக பேசியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், விஜய் நடிப்பில் மதுர என்ற படம் வெளியான போது, நான் கல்லூரியில் சேருவதற்கான தேரவும் அன்றுதான் நடந்தது.
தேர்வு எழுதி முடித்துவிட்டுச் செல்ல எனக்கு படத்துக்கு நேரமாகி விட்டது. அப்போது ஓடும் பஸ்சில் இருந்து இறங்கி விறுவிறுப்பாக தியேட்டரை நோக்கி ஓடினேன். அப்போது தியேட்டர் முன் இருந்த குழிக்குள் விழுந்தேன். என்றாலும் அப்படியே குழிக்குள் இருந்து எழுந்து படம் பார்க்க சென்றுவிட்டேன். அந்தளவுக்கு விஜயின் தீவிர ரசிகன் நான் என்று மாரி செல்வராஜ் கூறியிருக்கிறார்.





