- Advertisement -
Homeபொழுதுபோக்குபைசன் படத்தில் துருவ் அப்பா கேரக்டரில் பசுபதிக்கு பதில் நடிக்க இருந்தது இவரா... மாரி செல்வராஜ்...

பைசன் படத்தில் துருவ் அப்பா கேரக்டரில் பசுபதிக்கு பதில் நடிக்க இருந்தது இவரா… மாரி செல்வராஜ் கூறிய ஆச்சரிய தகவல்…

- Advertisement -

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தொடங்கிய அவரது வெற்றி பயணம், கர்ணன், மாமன்னன், வாழை வரை சென்று கோலிவுட் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. தற்போது அடுத்ததாக பைசன் என்னும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ்.

இந்தப் படத்தின் தலைப்புக்கு கீழே காளமாடன் என்ற டேக் லைனும் வைக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை கதையாக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ். விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக வருகிறார். அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

- Advertisement -

இதுபோக பைசன் திரைப்படத்தில், ரஜிஷா விஜயன், பசுபதி, லால், கலையரசன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள். தூத்துக்குடியைச் சேர்ந்த மனத்தி கணேசன் என்னும் கபடி வீரரின் வாழ்க்கையை மையப்படுத்திதான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. நிவாஸ் கே பிரசன்னா இசையில் இந்த திரைப்படத்திலிருந்து வெளியான நான்கு பாடல்களும் ஹிட் அடித்துள்ளன.

படத்தில் துருவ் விக்ரமின் தந்தை கதாபாத்திரம் பசுபதிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பைசன் திரைப்படம் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து உள்ளார் மாரி செல்வராஜ். அதில், படத்தில் பசுபதி கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் இருக்கும். இதற்காக நான் எஸ் ஜே சூர்யா மற்றும் விக்ரம் ஆகியோரிடம் கேட்டேன். ஆனால் துருவ் இந்த திரைப்படத்தில் தனியாக தெரிய வேண்டும் என்று விக்ரம் என்னிடம் கூறினார். அவரது காரணம் எனக்கு சரியெனப்பட்டது.

- Advertisement -

படத்தின் சூட்டிங் பணிகள் ஆரம்பித்ததும் துருவ் மிகவும் சிரமப்பட்டான். நாம் வேண்டுமானால் வேறு கதை பண்ணலாமா என்று அவனிடம் கேட்டேன். அதற்கு அவன் ஆமாம் இது கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால் இது உங்களின் கனவு திரைப்படம். நான் உங்களை எனது தந்தைபோல் பார்க்கிறேன். நீங்கள் என்னை பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறினான். அந்த வார்த்தை என்னை உலுக்கியது.

திருநெல்வேலியில் நான் படித்த கல்லூரிக்கு எதிரேதான் நிவாஸ் கே பிரசன்னாவின் வீடு. எப்போதும் ஒரு சின்ன நெருக்கம் எங்களுடன் இருந்து கொண்டே இருந்தது. அவரைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். நாங்கள் இருவரும் ஒன்றாக பயணித்தோம். என் உலகிற்குள் அருமையான பாடல்களை அவர் கொடுத்து விட்டார் என்று தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி பைசன் திரைப்படம் ரிலீஸ் செய்யப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்