- Advertisement -
Homeபொழுதுபோக்குமாயாண்டி குடும்பத்தார் 2ம் பாகம் படம் உருவாகிறது, திரு மாணிக்கம் பட இயக்குனர் நந்தா பெரியசாமி...

மாயாண்டி குடும்பத்தார் 2ம் பாகம் படம் உருவாகிறது, திரு மாணிக்கம் பட இயக்குனர் நந்தா பெரியசாமி சொன்ன லேட்டஸ்ட் தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் குடும்ப படங்களை தரும் இயக்குனர் முன்பு நிறைய பேர் இருந்தனர். அதனால் குடும்பங்களுடன் படம் பார்க்க மக்கள் தியேட்டர்களுக்கு சென்றனர். ஆனால் இப்போது குடும்பமாக சென்று படம் பார்க்கும் நிலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. வன்முறை, ஆபாச படங்களே பெருமளவில் திரைக்கு வருகின்றன.

இயக்குனர்கள் ஸ்ரீதர் கே பாலச்சந்தர் பாரதிராஜா கே பாக்யராஜ் விசு வி சேகர் ஆர் சுந்தர்ராஜன் போன்றவர்களின் படங்கள் குடும்பங்களுடன் பார்க்கும் படங்களாக இருந்தன. அதனால்தான் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படம் என்று முதலில் கூறினார்கள். இப்போதெல்லாம் ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் நடித்த படங்களையே குடும்பமாக அமர்ந்து பார்க்க முடியவில்லை.

- Advertisement -

ஆனால் மாயாண்டி குடும்பத்தார் முத்துக்கு முத்தாக போன்ற மிக அற்புதமான குடும்ப படங்களை தந்தவர் இயக்குனர் ராசு மதுரவன். ஆனால் அவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவரது படங்களில் நடித்தவர் இயக்குனர் நந்தா பெரியசாமி. சமீபத்தில் வெளியான திரு மாணிக்கம் படத்தை இயக்கி, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பாராட்டி வருகின்றனர்.

நேர்காணல் ஒன்றில் நந்தா பெரியசாமி கூறியதாவது, இயக்குனர் ராசு மதுரவன் இயக்கத்தில் கோரிபாளையம் மாயாண்டி குடும்பத்தார் என 2 படங்களில் நான் நடித்திருக்கிறேன். அவரது படத்தில் நடித்தால் ஷூட்டிங் ஸ்பாட் மாதிரியே இருக்காது. ஊர்ல சொந்தக்காரங்க வீட்ல காதுகுத்து கெடாவெட்டு விழாவுக்கு போன மாதிரியே இருக்கும். ரொம்ப ஜாலியா இருக்கும்.

- Advertisement -

ஸ்கிரிப்ட் பேப்பர் அவர் கையிலேயே வெச்சுக்க மாட்டார். மைண்டுக்குள்ள எல்லா விஷயத்தையும் டயலாக் எல்லாம் வெச்சிருப்பார். ரொம்ப யதார்த்தமாக கேரக்டர்களை, டயலாக் பேச சொல்லி கொடுத்து லைவ் ஆக நடிக்க வைப்பார். அதனால்தான் இப்பவும் மாயாண்டி குடும்பத்தார் படம் போட்டால் டிஆர்பி ஏறுகிறது.

மாயாண்டி குடும்பத்தார் 2ம் பாகம் எடுக்கும் ஒரு முயற்சி இப்போது நடந்து வருகிறது. அந்த 2ம் பாகத்தை ஜெகன் டைரக்ட் செய்கிறார். ராசு மதுரவன் இப்போது இல்லை என்பதை இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை என்று இயக்குனர் நந்தா பெரியசாமி கூறியிருக்கிறார். மாயாண்டி குடும்பத்தார் படத்தில் பொன்வண்ணன் தருண்கோபி சீமான் நந்தா பெரியசாமி மணிவண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

- Advertisement -

சற்று முன்