சமீப காலமாகவே சூப்பர் ஸ்டார் பட்டம் ரஜினிக்கு அடுத்து யாருக்கு செல்லும் என்பதே பெரிய அளவில் விவாதிக்கப்படும் விடயமாக உள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகிய வேளையில் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது பிரபலங்கள் பலரும் ரஜினிகாந்தே நிறைந்த சூப்பர் ஸ்டார் என்று கூறியிருந்தனர். அதோடு ரசிகர்களும் ரஜினிக்காக தங்களது ஆதரவினை தெரிவித்திருந்தனர்.

அதேபோன்று ரஜினியும் கழுகு காகம் கதையை கூறி தான் எப்போதும் உயர பறப்பவன் தான் என்பது போல உவமையாக கூறியிருந்தார். இது ஒரு பக்கம் இருக்க விஜய் ரசிகர்களோ விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறி வருகின்றனர். இதன் காரணமாக அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றன.
ஆனால் ரஜினி தான் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று பலரும் கூறி வரும் வேளையில் தமிழ் காமெடி நடிகரான மீசை ராஜேந்திரன் ரஜினி மற்றும் விஜய் ஆகியோரது குணாதிசயங்கள் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் : நான் ஒருமுறை ஹைதராபாத்தில் உள்ள தனியார் பிலிம் சிட்டியில் ஒரு சூட்டிங்கில் இருந்தேன்.

அங்கே அண்ணாத்த படம் சூட்டிங்கும் நடந்து கொண்டிருந்தது. அப்போது தூரத்திலிருந்து என்னை பார்த்த ரஜினி அருகில் அழைத்து என்னிடம் பேசினார். ஆனால் அதனை கவனித்த அசோசியேட் டைரக்டர்கள் நேராக வந்து என்னிடம் ஏன் இங்கு வந்தீர்கள்? என்பது போல கேட்டார்கள். அதற்கு ரஜினிகாந்த் நான் தான் அவரை அழைத்துப் பேசினேன் ஒன்றும் பிரச்சனை இல்லை செல்லுங்கள் என்று கூறிவிட்டார். இப்படி இருப்பது தான் ரஜினியின் குணம்.
ஆனால் விஜய் அப்படி கிடையாது. விஜய்யுடன் நான் ஏழு படங்களில் இதுவரை நடித்துள்ளேன். அப்படி இருந்தும் வில்லு படத்தின் போது நான் காலையில் அவரைப் பார்த்து வணக்கம் வைத்ததும் விஜய் என்னை கண்டுகொள்ளாமல் சென்று விட்டார். ஒருவேளை என்னை கவனிக்க வில்லையோ என்று அடுத்த நாளும் அவருக்கு வணக்கம் வைத்தேன். ஆனால் அப்போதும் என்னை திரும்பிப் பார்த்த அவர் எதுவுமே கூறாமல் சென்று விட்டார் விஜய்யின் குணாதிசயம் இதுதான். ஆனால் சூப்பர் ஸ்டார் அப்படி கிடையாது எல்லோரையும் மதிக்கத் தெரிந்தவர் என்று மீசை ராஜேந்திரன் கூறியது குறிப்பிடத்தக்கது.





