- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனி அரசு விருந்து எதுவும் நடந்தால் என்னை அழைக்காதீர்கள் - அதிகாரிகளிடம் கோபமாக சொன்ன தமிழக...

இனி அரசு விருந்து எதுவும் நடந்தால் என்னை அழைக்காதீர்கள் – அதிகாரிகளிடம் கோபமாக சொன்ன தமிழக முதல்வர் எம்ஜிஆர்!

- Advertisement -

தமிழக முதல்வராக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பதவிக்கு வந்த புதிதில் நடந்த சம்பவம் இது. தமிழகம் வந்த வெளிநாட்டு பிரமுகர்களை அழைத்து கன்னிமாரா ஓட்டலில் தமிழ்நாடு அரசு சார்பில் விருந்து நடக்கிறது. விருந்து முடிந்த பிறகு 11 மணியளவில் தலைவர் எம்ஜிஆர் கார் ஏறும்போது டிரைவரிடம் சாப்பிடாயா? என்று கேட்கிறார்.

அதற்கு டிரைவர் சாப்பிடேன் என்று தயங்கிபடியே சொல்கிறார். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் என்ன சாப்பிட்டாய் என்று விடாப்பிடியாக கேட்க, டிரைவரும் ஏதேதோ சாப்பிடதாக சொல்லி சமாளிக்கிறார். டிரைவர் அங்கு உண்மையில் சாப்பிடவில்லை என்பதை புரிந்துக்கொண் எம்ஜிஆர் கடும் கோபம் கொள்கிறார்.

- Advertisement -

அங்கு வந்த பிற விருந்தினர்களின் கார் மற்றும் இதர வாகன டிரைவர்களும் சாப்பிடவில்லை என்பது எம்ஜிஆருக்கு தெரிய வருகிறது. அப்போது தலைவரிடம் பேசிய பாதுகாப்பு அதிகாரிகள், நட்சத்திர ஓட்டலில் டிரைவர்கள் சாப்பிட அனுமதி இல்லை என்று கூறுகின்றனர். அவ்வளவு தான். எம்ஜிஆர் முகம் கோபத்தில் சிவந்து போயிருக்கிறது.

மறுநாள் காலையில் அதிகாரிகளை அழைத்துப் பேசிய எம்ஜிஆர், முக்கிய அதிகாரிகள் விருந்தினருக்கு மட்டும் தான் வயிறு உள்ளதா? அவர்களை அங்கு அழைத்து வரும் டிரைவர்களுக்கு வயிறு இல்லையா, அவர்களுக்குப் பசிக்காதா? அரசு சார்பில் விருந்து நடந்தால் டிரைவருக்கும் சாப்பாடு போட வேண்டும்.

- Advertisement -

அரசு சார்பில் சாப்பாடு போட முடியாது என்றால் என்னுடைய சொந்த பணத்தை தருகிறேன். அதுவும் முடியாது என்றால் என்னை அரசு விருந்துக்கு எதுவும் அழைக்காதீர்கள் என எம்ஜிஆர் கண்டிப்பாக கூறிவிட்டார். அதன்பின்புதான் டிரைவர்களும் சாப்பிடலாம் அல்லது சாப்பிடுவதற்கு உரிய தொகை கொடுக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

இப்படி எல்லாம் பிறரை பற்றி யோசிக்க நல்லது செய்ய எம்ஜிஆரால் மட்டுமே முடியும். காரில் ஒரு இடத்துக்கு நம்மை அழைத்து வருபவர்கள்தான் டிரைவர்கள்தான். அவர்கள் பசியுடன் இருக்கும் போது நாம் மட்டும் பசியாறி விட்டு சென்றால் அது நியாயமா என்ற புரட்சித் தலைவரின் கோபத்தில் நிறைந்திருந்த மனித நேயமும் அவரது கருணையும்தான் இன்றும் அவர் புகழ் பாட வைக்கிறது.

- Advertisement -

சற்று முன்