சுதா கொங்கரா முதலில் சூர்யாவை வைத்து புறநானூறு திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. இதற்கான அறிவிப்பும் வெளியானது. சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனமே இதனை தயாரிப்பதாக தெரிவித்தது. துல்கர் சல்மான் நஸ்ரியா நசீம் விஜய் வர்மா உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றார்கள்.
ஆனால் படத்தின் சூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே இந்த திட்டம் கைவிடப்பட்டது. படத்தில் சில காட்சிகளை மாற்ற சூர்யா கூறியதாகவும், அதற்கு சுதா உடன்படாததால் இந்த திரைப்படம் கைவிடப்பட்டதாகவும் திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த நிலையில் இதே கதையை சிவகார்த்திகேயனை வைத்து சுதா இயக்கி வருகிறார்.
படத்திற்கு பராசக்தி என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. Dawn பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. 1960 காலகட்டங்களில் இந்தித்திணிப்புக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது. இந்த கான்செப்ட்டை மையமாக வைத்து தான் சுதா இந்த திரைப்படத்தை எடுத்து வருகிறார்.
முக்கியமாக கல்லூரி மாணவர்களின் போராட்டம் அப்போது எப்படி இருந்தது என்பதை தான் அவர் இதில் காட்டுகிறாராம். படத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களாக சிவகார்த்திகேயன், அதர்வா ஆகியோர் வருகின்றனர். ரவி மோகனுக்கு வில்லன் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் தெலுங்கு பெண்ணாக நடிக்கிறார் ஸ்ரீ லீலா.
ஏற்கனவே பராசக்தி திரைப்படம் தொடர்பான டைட்டில் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக அதில் இசை மிரட்டலாக இருந்ததாக கூறினார்கள். தனது நூறாவது திரைப்படமான பராசக்தியில் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்து வருகிறார் ஜிவி பிரகாஷ். சென்னை சிதம்பரம் காரைக்குடியை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் சுதா கொங்கராவிடம் சிவகார்த்திகேயன், வேண்டுகோள் ஒன்றை வைத்திருக்கிறாராம். தனக்கான போர்ஷனை மே மாதத்திற்குள் அவர் முடிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறாராம். அடுத்தடுத்த இரண்டு ப்ராஜெக்ட்கள் இருப்பதால் அவர் இதனை தெரிவித்து இருக்கிறாராம். இதற்கு சுதா கொங்கராவும் சம்மதம் தெரிவித்துள்ளாராம். இந்த திரைப்படத்தை முடித்துவிட்டு, முருகதாஸ் உடனான மதராசி படத்தின் இறுதிக் காட்சிகளில் நடிக்க சிவகார்த்திகேயன் ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது.





