- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடேங்கப்பா மலையாள நடிகர் மோகன்லால் வீட்டில் இத்தனை யானை தந்தங்களா? - அவரே இதை பட்டியலிட்டு...

அடேங்கப்பா மலையாள நடிகர் மோகன்லால் வீட்டில் இத்தனை யானை தந்தங்களா? – அவரே இதை பட்டியலிட்டு சொல்லிட்டாரே?

- Advertisement -

வனவிலங்குகளை இறைச்சிக்காகவோ அல்லது அதன் உடல் பாகங்களில் உள்ள நகங்கள், பற்கள், முடிகள் தோல் தந்தங்கள் உள்ளிட்ட விலைமதிப்புமிக்க பொருட்களுக்காகவோ கொல்லுவது சட்டப்படி குற்றமாகும். ஆனாலும் சில வனப்பகுதிகளில் இந்த காரணங்களுக்காக வன விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன.

அந்த வகையில் வனவிலங்குகளில் பட்டியலில் உள்ள யானையின் தந்தங்களை வீடுகளில் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். கேரளாவில் சட்டவிரோதமாக வீடுகளில் வைத்திருக்கும் யானை தந்தங்கள் மற்றும் வனவிலங்கு சார்ந்த பொருட்கள் குறித்து பொதுமக்கள் தாங்களாகவே தகவல் அளித்தால் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என கேரளம் மாநில வனத்துறை சமீபத்தில் அறிவித்தது.

- Advertisement -

கேரளம் மாநிலத்தில் வனப்பகுதிகள் நிறைந்து காணப்படுகின்றன. கடந்த காலங்களில் யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டுள்ளன. அப்போது யானை தந்தங்களால் செய்யப்பட்ட சிலைகள் பலருக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் யானை தந்தங்கள் வீடுகளில் அழகுக்காக வைக்கப்பட்டன. அவற்றை மீட்க தற்போது கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த அறிவிப்பின் அடிப்படையில் மலையாள சினிமாவில் நட்சத்திர நடிகர் மோகன்லால் தனது வீட்டில் 10 யானைத் தந்தங்கள் மற்றும் 13 தந்தங்களால் செய்யப்பட்ட சிலைகள் இருப்பதாக வனத்துறைக்கு தகவல் அளித்திருக்கிறார். தானாகவே அவர் முன்வந்து தனது வீட்டில் தந்தங்களும் தந்தங்களால் ஆன சிலைகளும் இருப்பதை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து நடிகர் மோகன்லால் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது, எனது வீட்டில் உள்ள யானைத் தந்தங்களும் தந்தத்தால் செய்யப்பட்ட சிலைகளும் தனக்கு பரிசாக கிடைத்தவை மற்றும் குடும்பத்தில் பாரம்பரியமாக வந்தவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக நடிகர் மோகன்லால் வீட்டில் இருந்த நான்கு யானை தந்தங்கள் தொடர்பாக வனத்துறை வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்போது ஆறு யானை தந்தங்கள் கூடுதலாக இருப்பதையும் அவர் வெளிப்படையாக அறிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது. மிக விரைவில் அவற்றை எல்லாம் அவர் வனத்துறைக்கு ஒப்படைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்