சீதாராமம் படம் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை மிருணாள் தாகூர். தமிழில் இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். மிகவும் அழகான நடிகையாக அவர் இந்திய சினிமாவில் ரசிகர்களின் அன்புக்குரிய நடிகையாக இருந்து வருகிறார். அவருக்கு தமிழில் இந்தியில் தெலுங்கில் தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக நடிகை மிருணாள் தாகூர் நடிகர் தனுஷ் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாகவும் ஒருவரை ஒருவர் விரும்புவதாகவும் மணிக்கணக்கில் இரவில் இருவரும் ஷாட்டிங் செய்வதாகவும் இணையத்தில் தகவல் பரவியது. மேலும் வரும் 14ம் தேதி காதலர் தினத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்வதாகவும் தகவல் வைரலானது.
ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து லிங்கா யாத்ரா என்ற 2 வளர்ந்த பிள்ளைகளுக்கு தந்தையாக இருப்பவர் நடிகர் தனுஷ். நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் பாடகர் என பன்முக தன்மை கொண்ட அவர் சினிமாவில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வரும் நிலையில் அவர் மிருணாள் தாகூருடன் கொண்டிருப்பது சாதாரண நட்பு மட்டுமே என்றும் தகவல் வெளியானது.
எனினும் சினிமாவில் ஒரு நடிகர் ஒரு நடிகை சற்று நெருக்கமான நட்புடன் பழகி விட்டாலே அவர்களுக்குள் காதல் என்று தகவல் பரவுவது வழக்கம்தான். அதிலும் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்து விட்ட நிலையில் இதுபோன்ற கிசுகிசுக்கள் வேகமாக காட்டுத் தீ போல பரவி விடுகிறது. இந்நிலையில் தனது காதலன் குறித்து நடிகை மிருணாள் தாகூர் வெளிப்படையாக ஒரு நிகழ்ச்சியில் தற்போது பேசியிருக்கிறார்.
இதுபற்றி மிருணாள் தாகூர் கூறியதாவது, நான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன். அவர் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால் ஒரு கட்டத்தில் என்னுடைய காதலை அவர் ஏற்க மறுத்துவிட்டார். நீ நடிகையாக இருப்பதால் உன்னை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
என்னுடைய குடும்பத்திற்கு நீ செட்டாக மாட்டாய் என்று நேரடியாக சொல்லி என்னுடைய காதலை அவர் பிரேக் அப் செய்து விட்டார். அந்த விஷயம் அப்போது எனக்கு மிகப் பெரிய மன அழுத்தத்தை வேதனையை தந்தது என்று மிருணாள் தாகூர் கூறியிருக்கிறார். மேலும் நடிகர் தனுஷ் எனக்கு ஒரு சகோதரரை போன்றவர் என்று மிருணாள் தாகூர் கூறியதாகவும் இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.





