- Advertisement -
Homeபொழுதுபோக்குஇசைஞானி இளையராஜா வெளியிட்ட திடீர் அறிவிப்பு, என்ன இப்படி திடீருன்னு சொல்லிட்டாரு… - இனி ஊரெல்லாம்...

இசைஞானி இளையராஜா வெளியிட்ட திடீர் அறிவிப்பு, என்ன இப்படி திடீருன்னு சொல்லிட்டாரு… – இனி ஊரெல்லாம் ஒரே கொண்டாட்டம்தான் போங்க!

- Advertisement -

தமிழ் சினிமா உலகில் இசை சக்ரவர்த்தியாக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. கடந்த 47 ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில் இளையராஜாவின் பாடல்கள் இல்லாத படங்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு, இளையராஜா இசைத்துறையில் கோலோச்சியவர். அவரது இசையில் வந்த பாடல்களை முணுமுணுக்காத உதடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை தந்தவர்.

ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு அர்ஜுன் முரளி என அன்றைய நடிகர்கள் முதல் இன்று விஜய் அஜீத்குமார் சூர்யா வரை, சமீபத்தில் கதாநாயகன் ஆன நடிகர் சூரி படம் வரை இளையராஜா இசையமைக்காத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, இளையராஜா முன்னணியில் இருந்து வருகிறார். இன்னும் இளையராஜா இசைக்காக ரசிகர்கள் தவம் இருக்கின்றனர் என்றால் அது மிகையல்ல.

- Advertisement -

விரைவில் தனுஷ் நடிப்பில் இரண்டு பாகங்களாக இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜா திரைப்படங்களில் மட்டுமல்லாமல் அவ்வப்போது இசை நிகழ்ச்சியும் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

சென்னையில் பல இசை நிகழ்ச்சிகளை நடத்திய இளையராஜா, வெளிநாடுகளில் இசைக்கச்சேரி நிகழ்த்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 14ம் தேதி கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இளையராஜாவின் இசை விருந்து என்ற பெயரில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடந்தது. காவிரி டெல்டா பகுதியில் முதன்முறையாக நடந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை காண ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்தனர்.

- Advertisement -

நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பே லேசாக மழை பெய்த நிலையில், இசை நிகழ்ச்சி துவங்கியதும் மழை கொட்டோ கொட்டென கொட்டியது. ஆனாலும் ரசிகர்கள் மழையில் நனைந்தபடி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி உற்சாகமாக பார்த்தும், கேட்டும் ரசித்தனர். இதனை பாராட்டிய இளையராஜா இனி எல்லா ஊர்களிலும் இசை நிகழ்ச்சி நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இளையராஜா வெளியிட்டுள்ள பதிவில், பெரும் மழையிலும் என் இசை நிகழ்ச்சியை ரசிக்க வந்த கும்பகோணம் மக்களே, உங்களின் ஆதரவை என்றுமே மறக்க முடியாது. நன்றி. இனி என் இசை பயணம் தலைநகரில் மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் நடைபெறும், என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இனி தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் இளையராஜா இசை நிகழ்ச்சி நடைபெறும் என்பதால், இளையராஜாவின் இசை ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்