- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் வீட்டு மொட்டை மாடியில் இருந்த மர்ம நபர்… பலத்த காவலை மீறி அவர்...

நடிகர் விஜய் வீட்டு மொட்டை மாடியில் இருந்த மர்ம நபர்… பலத்த காவலை மீறி அவர் வீட்டுக்குள் வந்தது எப்படி? விசாரணை செய்த போலீசார் குழப்பம்!

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். ஆனால் அரசியல் களத்தில் அவர் குதித்த நிலையில் ஜனநாயகன் படத்துடன் சினிமாவை விட்டு விலகுவதாக ஏற்கனவே அறிவித்து விட்டார். ஒருவேளை தேர்தல் முடிவுகளை பொருத்து அவரது முடிவுகளில் ஏதும் மாற்றம் வரலாம் என்றும் ஒரு தகவல் கோலிவுட்டில் இருந்து வருகிறது.

ஆனால் நடிகர் விஜய் அரசியல் களத்தில் இருந்தாலும் சினிமாவில் நடிக்க வேண்டும். 2 ஆண்டுகளுக்கு ஒரு படத்திலாவது அவர் நடிக்க வேண்டும் என்பதே தளபதி ரசிகர்களின் வேண்டுகோளாக இருந்து வருகிறது. இப்போதைய சூழலில் இனி நடிக்க வேண்டாம் என்ற ஒரு தீர்மானமான முடிவில்தான் விஜய் இருந்து வருகிறார்.

- Advertisement -

சென்னையை அடுத்த நீலாங்கரையில் நடிகர் விஜய்க்கு சொந்தமான வீடு உள்ளது. அங்குதான் விஜய் இருக்கிறார். நேற்று மாலை இந்த வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் மொட்டை மாடிக்கு சென்று அமர்ந்திருக்கிறார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த வீட்டு காவலாளிகள் அந்த வாலிபரை பிடித்து நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட அந்த வாலிபர் மதுராந்தகத்தைச் சேர்ந்தவர். பெயர் அருண் என்பதும் தெரிய வந்துள்ளது. அவருக்கு வயது 24 என்றும் உறுதியாகி உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும் வேளச்சேரியில் உள்ள சித்தி வீட்டில் அவர் வசிப்பதும் தெரிய வந்தது.

- Advertisement -

அவர் எப்படி நடிகர் விஜய் வீட்டுக்குள் நுழைந்து மொட்டை மாடிக்கு சென்றார் என தெரியவில்லை. அவரை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சேர்த்த போலீசார் மேலும் இதுபற்றி விசாரித்து வருகின்றனர். நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். மிகப்பெரிய உச்சத்தில் இருக்கும் ஒரு நட்சத்திர நடிகராகவும் உள்ளார். இவருக்கு ஏற்கனவே வீட்டில் செக்யூரிட்டி பாதுகாப்பு இருந்து வருகிறது.

இதுதவிர மத்திய அரசின் ஒய் பிளஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் விஜய் வீட்டுக்குள் நுழைந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் மொட்டை மாடிக்கு எப்படி சென்றார், எப்படி அவர் வீட்டுக்குள் வந்ததை இத்தனை பேர் இருந்தும் கவனிக்காமல் விட்டார்கள்? கண்காணிப்பு கேமராவிலும் அன்னிய நபரான அவர் வந்தது தெரியவில்லையா என்று தளபதி ரசிகர்கள், தவெக தொண்டர்கள் பலத்த அதிர்ச்சியில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்