- Advertisement -
Homeபொழுதுபோக்குபழைய சம்பவத்தை சொல்லி விக்னேஷ் சிவன் போட்ட கண்டிஷன்… அதெல்லாம் உங்க தனிப்பட்ட பிரச்னை என்று...

பழைய சம்பவத்தை சொல்லி விக்னேஷ் சிவன் போட்ட கண்டிஷன்… அதெல்லாம் உங்க தனிப்பட்ட பிரச்னை என்று சொன்ன நயன்தாரா – உண்மையில் நடந்தது என்ன?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமானவர் நயன்தாரா. தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபல நடிகையாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். ஒரு கட்டத்தில் கதாநாயகியை மையப்படுத்திய கதைகளில் அவர் நடித்தது ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் என்றும் நயன்தாரா அழைக்கப்பட்டார்.

ஆரம்பத்தில் நடிகர் சிம்புவுடனும் அதன்பிறகு நடிகர் பிரபுதேவா ஆகியோருடன் காதல் வயப்பட்ட நயன்தாரா, பிறகு அவர்களை விட்டு பிரிந்தார். நானும் ரௌடிதான் என்ற படத்தில் நடித்த போது அந்த படத்தை டைரக்ட் செய்த இயக்குனர் விக்னேஷ்சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

- Advertisement -

தொடர்ந்து 7 ஆண்டுகள் அவர்கள் காதலித்த நிலையில், 2023ம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கும் பெற்றோர் ஆகிவிட்டனர். திருமணமான 4 மாதங்களில் அவர்கள் பெற்றோர் ஆனது சர்ச்சையை கிளப்பினாலும், எல்லாம் சட்ட விதிமுறைகளின் படி நடந்ததாக கூறி அந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணத்துக்கு பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியான எந்த ஒரு படமும் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெறவில்லை. இதனால் தனது லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கூட வேண்டாம் என்று மறுத்த நடிகை நயன்தாரா, சமீபகாலமாக சம்பளத்தை கூட கணிசமாக குறைத்துக்கொண்டதாக இணையத்தில் தகவல் பரவியது.

- Advertisement -

இந்த சூழலில் தமிழில் முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்களில் நடிக்க நடிகை நயன்தாரா தரப்பில் இருந்து இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் தூது விட்டு வருகின்றனர். அதில் நடிகர் அஜீத்குமார் படங்களில் நடிக்கவும் நயன்தாரா முடிவு செய்திருக்கிறார். இதை தெரிந்துக் கொண்ட அவரது கணவர் விக்னேஷ் சிவன் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

வலிமை படத்துக்கு பின், தனக்கு இயக்குனர் வாய்ப்பளிப்பதாக கூறிவிட்டு கடைசி நேரத்தில் தன்னை நிராகரித்த அஜீத்குமாருடன் சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று மனைவி நயன்தாராவிடம் கூறியிருக்கிறார். அந்த நிகழ்ச்சியால் ஆரம்பத்தில் நானும் அஜீத்குமார் மீது கடும் கோபத்தில் இருந்தேன். ஆனால் இப்போது எனக்கு வெற்றிப் படங்கள் தேவை. அதனால் அஜீத்குமார் உங்களை நிராகரித்தது உங்கள் தனிப்பட்ட பிரச்னை. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அஜீத்குமாருடன் மீண்டும் இணைந்து நடிப்பேன் என்று கட் அண்ட் ரைட்டாக கணவரிடம் பேசியிருக்கிறார் நயன்தாரா என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்