- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த விஷயத்துல விஜயை பின்னுக்கு தள்ளி விட்டாரா நடிகர் பிரசாந்த் - சீமானுக்கு வாழ்த்து சொன்ன...

இந்த விஷயத்துல விஜயை பின்னுக்கு தள்ளி விட்டாரா நடிகர் பிரசாந்த் – சீமானுக்கு வாழ்த்து சொன்ன தளபதியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

- Advertisement -

நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவக்கி இருக்கிறார். இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற படத்தில் பிஸியாக நடித்து வந்த விஜய், சில தினங்களுக்கு முன்புதான் அந்த படத்தின் நடிப்பு மற்றும் டப்பிங் பணிகளை முழுமையாக நிறைவு செய்தார்.

வரும் அக்டோபர் மாதம் தனது 69 வது படத்தின் படப்பிடிப்பை துவங்கும் விஜய், அந்த படத்துடன் தனது சினிமா பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, முழுநேர அரசியல்வாதியாக மாற உள்ளார். தனது கடைசி படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் எச் வினோத்துக்கு விஜய் கொடுத்துள்ள நிலையில், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு ரகசியமாக நடந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில், இந்திய நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. இதில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. கடந்த 4ம் தேதி நாடு முழுவதும் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதில் பாஜக கூட்டணி 291 இடங்கள், இண்டியா கூட்டணி 234 இடங்கள், இதர இடங்கள் 18 என கைப்பற்றியது.

தமிழகத்தில் திமுக தலைமையில் போட்டியிட்ட காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் வெற்றிபெற்ற நிலையில், 39 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடியது. பாண்டிச்சேரியிலும் திமுக கூட்டணி காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனால் 40க்கு 40 என்ற நிலையில், திமுக தமிழக அரசியல் வரலாற்றில் பெரிய சாதனை செய்திருப்பதாக பார்க்கப்படுகிறது. ஒரு இடத்தில் கூட அதிமுக, பாஜக, தேமுதிக போன்ற கட்சிகள் வெற்றி பெறாதது திமுகவுக்கு பெரிய இமேஜை தந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தலைவரான நடிகர் விஜய் தெலுங்கு தேசம் கட்சி சந்திரபாபு நாயுடுவுக்கும், பவர் கல்யாணுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி சீமானுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனுக்கும் வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார். அதில், நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில், மக்களின் நம்பிக்கையை பெற்று மாநில கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது வாழ்த்துகளை, பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியிருக்கிறார்.

அதே நேரத்தில் கோட் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்துள்ள நடிகர் பிரசாந்த், தனது தந்தை தியாகராஜனுடன் சென்று, தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, வாழ்த்துகளை சொல்லி பூங்கொத்து வழங்கியிருப்பது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காத சீமானுக்கு வாழ்த்து சொல்லி, திமுகவை கண்டுக்காத விஜய்க்கு, அரசியலில் எந்த நேரத்தில் யாரை பாராட்ட வேண்டும், வாழ்த்த வேண்டும் என்றுகூட தெரியலையே என்று கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்