தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை, துணிவு போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் எச். வினோத் இயக்கும் கமல்ஹாசனின் படம், வரும் 2024ல் ஷூட்டிங் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 2025ம் ஆண்டில் ஜூன் அல்லது டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பை துவங்கலாம் என்று 2 ஆண்டுகள் எச். வினோத்தை வெயிட்டிங்கில் இருக்க சொன்ன கமல், திடீரென தன் முடிவை மாற்றிக்கொண்டார்.
இப்போது இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களில் ஷங்கர் இயக்கத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் கமல், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் வாரம் ஒருநாள் கலந்துக்கொண்டு இருக்கிறார். 6 நாட்கள் கல்கி என்ற பான் இந்தியா படத்திலும் நடித்துவிட்டு வந்துவிட்டார்.
கமல் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க சொன்ன நிலையில் தனுஷ் அல்லது கார்த்தி படத்தை அதற்குள் இயக்கி விட்டு வந்துவிடலாம் என்ற முடிவுக்கு எச். வினோத் வந்துவிட்ட நிலையில், அதுகுறித்து பேசி முடிவெடுக்க ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். இதையடுத்து, கமல் படத்தை ஒத்திப்போடும் முடிவை கைவிட்டு இருக்கிறார்.
தக்லைப் படத்தின் டீசர் கடந்த நவம்பர் 7ம் தேதி, கமல் பிறந்தநாளையொட்டி வெளியானது. ஆனால் அதில் வரும் எதுவுமே படத்தில் சம்பந்தப்பட்டது இல்லை எனவும், ரசிகர்களை கவரும் ஒரே நோக்கத்தில் எடுக்கப்பட்ட டீசர் எனவும் தகவல் நேற்று வெளியாகி, கமல் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்களையே அதிருப்தியடைய செய்தது. இது ஒரு ஏமாற்றுவேலை என வெளிப்படையாக பலரும் விமர்சிக்க துவங்கிவிட்டனர்.
இதற்கிடையே எச் வினோத் இயக்கும் படத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என கமலுக்கும், எச் வினோத்துக்கும் இடையே ஆலோசனை நடந்திருக்கிறது. அப்போது தலைவன் இருக்கின்றான் என்ற தலைப்பையே வைத்துவிடலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பே என் படத்துக்கு இந்த தலைப்பை வைக்கும் பேச்சு வந்துவிட்டது.
அதனால் இப்போது இந்த படத்துக்கு அந்த டைட்டில் வைத்தால், இது பழைய கதையாக இருக்கலாம் என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எண்ணம் எழும். அதனால் கண்டிப்பாக அந்த டைட்டில் வேண்டாம். புதியதாக, பிரஷ்ஷாக புதிய டைட்டில் ஒன்றை வையுங்கள். அப்போதுதான் ரசிகர்கள் புதிய டைட்டில், புதிய கதை என்ற மனநிலையில் அந்த படத்தை எதிர்பார்ப்பார்கள் என்று கூறியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.





