50-வது திரைப்படமான மகாராஜா அண்மையில் ரிலீசானது. நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய இந்த திரைப்படத்தின், அனுராக் காஷ்யப், அபிராமி, மணிகண்டன், நட்டி, பாரதிராஜா, சிங்கம்புலி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர். நான் லீனியர் முறைப்படி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
சாதாரண கதை தான் என்றாலும், அதில் பல முடிச்சுகளை போட்டு சுவாரஸ்யமாக கூறியிருந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் ரசிகர்களால் பாராட்டப்பட்டார். காட்சிக்கு காட்சி திருப்புமுனைகள் இருக்க, ஒரு பழிவாங்கல் கதையை இவ்வளவு விறுவிறுப்பாக கொண்டு போக முடியுமா என்று பலரும் வியப்புடன் பார்த்தனர்.
இப்படி விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படம் மிகச் சிறப்பாக அமைந்ததால், நடிகர் தற்போது மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார். திரையரங்குகளில் மட்டுமல்லாமல் ஓ டி டி தளத்திலும் ரசிகர்களால் மகாராஜா திரைப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் இந்த திரைப்படம் குறித்து பேசி வருகிறார்கள்.
ஹிந்தி நடிகர் ஆமிர் கான் ஒரு படி மேலே போய், மகாராஜா திரைப்படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். ஒரு மிகப்பெரிய நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறதாம். இப்படி மகாராஜா மூலம் விஜய் சேதுபதி மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார். தற்போது அவர் அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் என்னும் திரைப்படத்தின் நடித்து வருகிறார்.
கிரைம் திரில்லராக எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுபோக பிசாசு படத்தில் இரண்டாம் பாகத்திலும் ஒரு கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். மேலும் ஏஸ் என்னும் படத்திலும் அவர் நடித்து வருகிறார். இந்த சமயத்தில்தான் இயக்குனர் பாண்டிராஜ் உடன் கைகோர்த்து இருக்கிறார் விஜய் சேதுபதி.
இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு பரோட்டா மாஸ்டர் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. இதற்கான பயிற்சியில் நடிகர் ஈடுபட்டு இருக்கிறாராம். திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் மூலம் தேசிய விருதை வென்ற நித்யா மேனன் தான் இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இதன் சூட்டிங் பணிகள் இன்று தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





