- Advertisement -
Homeபொழுதுபோக்கு85 வயதில் காமெடி கிங் கவுண்டமணி ஹீரோவாக நடித்த ஒத்த ஓட்டு முத்தையா படம், பாஸ்...

85 வயதில் காமெடி கிங் கவுண்டமணி ஹீரோவாக நடித்த ஒத்த ஓட்டு முத்தையா படம், பாஸ் மார்க் வாங்கியதா? – விமர்சித்த பிரபலம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி கிங் என்று அழைக்கப்பட்டவர் நடிகர் கவுண்டமணி. கடந்த 1980 – 90களில் கவுண்டமணி செந்தில் காமெடி இருந்தாலே அந்த படம் சூப்பர் ஹிட் ஆகிவிடும். ரஜினி கமல் விஜயகாந்த் பிரபு கார்த்திக் சத்யராஜ் சரத்குமார் படங்கள் துவங்கி விஜய் அஜீத்குமார் சிம்பு படங்கள் வரை கவுண்டமணி செந்தில் காமெடி பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது.

கவுண்டமணி செந்தில் இருவரையும் தனது படங்களின் மூலம் அறிமுகப்படுத்தியவர் நடிகர் மற்றும் இயக்குனர் கே பாக்யராஜ்தான். அவரது நிறைய படங்களிலும் இந்த ஜோடி நடித்திருக்கிறது. குறிப்பாக கிராமத்து நாயகன் ராமராஜன் படங்களில் மாபெரும் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது கவுண்டமணி செந்தில் காமெடிதான் என்றால் அது மிகையல்ல.

தற்போது கவுண்டமணிக்கு 85 வயதாகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே அவர் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டார். அவ்வப்போது தேர்வு செய்து தனக்கு பிடித்த கேரக்டராக தன்னை மையப்படுத்திய கதையாக இருந்தால் மட்டுமே நடிக்கிறார். கவுண்டமணி நடிப்பில் நேற்று வெளியான படம் ஒத்த ஓட்டு முத்தையா. இந்த படம் குறித்து நடிகர் மற்றும் திரை விமர்சகர் பயில்வாதன் ரங்கநாதன் விமர்சனம் செய்திருக்கிறார்.

ஒத்த ஓட்டு முத்தையா படம் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியிருப்பதாவது, 85 வயதில் தள்ளாடி தள்ளாடி நடந்து வரும் கவுண்டமணியை வைத்து படம் எடுப்பதே பெரிய விஷயம்தான். முதுமை காரணமாக பார்ப்பதற்குதான் கவுண்டமணி பாவமாக இருக்கிறார். ஆனால் அவரது கணீர் குரல் இன்னும் 16 வயதினிலே படத்தில் அவர் பேசியது போல்தான் இருக்கிறது.

மறைந்த நடிகர் சோ போல கவுண்டமணி இந்த படத்தில் நிறைய அரசியல் நையாண்டி செய்திருக்கிறார். ஆனால் எதற்கு தேவையில்லாமல் கவுண்டமணிக்கு சண்டை காட்சிகளை இயக்குனர் வைத்தார் என்று தெரியவில்லை. அரசியல் நையாண்டி கருத்துகளை சொன்ன விதத்தில் இயக்குனரை பாராட்டினாலும் அதை படமாக எடுப்பதில் அவர் சொதப்பி விட்டார் என்பதுதான் உண்மை.

டிவி சீரியல் போல தான் படத்தின் மேக்கிங் இருக்கிறது. நாடகம் போல தான் பல காட்சிகள் இருக்கின்றன. ஒளிப்பதிவாளர், எடிட்டர் எல்லாம் வேலையே செய்யவில்லை என்று தெரிகிறது. முன்னணி நடிகர்கள் மட்டுமே படத்தில் நன்றாக நடித்துள்ளனர். அனைவரும் சிறப்பாக ஒத்துழைத்திருந்தால் ஒத்த ஓட்டு முத்தையா இன்னும் ஜொலித்திருப்பான். இந்த படத்துக்கு 100க்கு 40 மார்க் கொடுத்து பாஸ் செய்துவிடலாம் என்று பயில்வான் ரங்கநாதன் தனது விமர்சனத்தில் கூறியிருக்கிறார். இந்த படத்தில் இவரும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்