- Advertisement -
Homeபொழுதுபோக்கு26 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திரைக்கு வந்த படையப்பா… 3 நாட்களில் எத்தனை கோடி வசூல்...

26 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திரைக்கு வந்த படையப்பா… 3 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?…

- Advertisement -

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்படுபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் கடந்த 1975ம் ஆண்டில் அபூர்வ ராகங்கள் என்ற படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். நடப்பு 2025ம் ஆண்டில் அவர் சினிமா பயணத்தில் தனது 50வது ஆண்டு நிறைவு பொன்விழாவை கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில் இம்மாதம் கடந்த 12ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாடிய அன்று இரவே அவர் தனது குடும்பத்துடன் ஆந்திரா மாநிலம் திருப்பதிக்குச் சென்றார், மறுநாள் காலை திருப்பதி திருமலையில் வீற்றுள்ள ஏழுமலை ஏழுமலையான் சுவாமியை குடும்பத்துடன் தரிசனம் செய்து வழிபட்டார். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின.

- Advertisement -

கூலி படத்துக்கு பின் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இன்னும் சில வாரங்களில் இந்த படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. அதன்பிறகு நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதற்கு தலைவர் 173 என தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்னண் இந்த படத்தை டைரக்ட் செய்ய உள்ளார்.

ரஜினிகாந்த் பிறந்த நாளில் கடந்த 12ம் தேதி, படையப்பா திரைப்படம் 26 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைக்கு வந்துள்ளது. கடந்த 1999ம் ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தை சொந்தமாக தயாரித்திருக்கிறார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கடைசியாக நடித்த படமும் இதுதான். இதில் ரஜினிக்கு அப்பாவாக அவர் நடித்திருந்தார்.

- Advertisement -

மேலும் நடிகை சௌந்தர்யா லட்சுமி வடிவுக்கரசி நடிகர்கள் மணிவண்ணன் ராதாரவி நாசர் ரமேஷ் கண்ணா செந்தில் அப்பாஸ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். குறிப்பாக நீலாம்பரி கேரக்டரில் வில்லியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தது இந்த படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 12ம் தேதி வெளியான இந்த படம் வசூல் நிலவரம் குறித்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

படையப்பா படம் ரி ரிலீசான முதல் நாளான 12ம் தேதி தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 6 கோடி ரூபாயும் 2வது நாளில் 13ம் தேதி 3 கோடி விடுமுறை தினமான இன்று இதுவரை 3 கோடி ரூபாய்க்கு மேலும் வசூலித்திருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. 3 நாட்களில் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படம் 12 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்