- Advertisement -
திரைப்பட கவிஞர் புலமைப்பித்தன் ஒருமுறை நேர்காணலில் கூறியதாவது, எம்ஜிஆர் இறப்பதற்கு சில நாட்கள் முன்பு என்னை வீட்டுக்கு அழைத்தார். நான் போய் பார்த்தால் கைகள் எல்லாம் நீலம் பூத்து கால்கள் எல்லாம் வீங்கி சாதாரண கட்டிலில் ஒரு துண்டை போர்த்திக் கொண்டு எம்ஜிஆர் உட்கார்ந்து இருந்தார். அப்போது எம்ஜிஆர் என்னிடம், நான் அமெரிக்கா போய் சிகிச்சை முடித்துவிட்டு வந்து உனக்கு ஏதாவது செய்கிறேன் என்றார். அதுக்கு நான், தொழிலாளியாக இருந்த என்னை பாடலாசிரியர் ஆக்கி வளர்த்துட்டீங்க. அதுவே போதும். நீங்க நல்லபடியாக குணமாகி திரும்பி வரணும். அதுதான் நீங்க எனக்கு செய்ற பெரிய உதவி என்றேன். அதை கேட்டதும் எம்ஜிஆர் அழுதுவிட்டார். அவரை அப்படியே தோளில் சாத்திக்கொண்டேன் என்று கவிஞர் புலமைப்புத்தான் கூறியிருக்கிறார்





