- Advertisement -
Homeபொழுதுபோக்கு25 ஆண்டுகளை நிறைவு செய்த அர்ஜூன் - மீனா படம்… கவிஞர் வைரமுத்து வெளியிட்ட பதிவு...

25 ஆண்டுகளை நிறைவு செய்த அர்ஜூன் – மீனா படம்… கவிஞர் வைரமுத்து வெளியிட்ட பதிவு – தேன் போல நல்ல பாடல்கள் கெட்டுப் போகாது என பெருமிதம்!

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பல நல்ல படங்களை தந்தவர் இயக்குனர் வசந்த். அவரது இயக்கத்தில் கடந்த 2000ம் ஆண்டில் வெளிவந்த படம் ரிதம். இந்த படத்தில் நடிகர் அர்ஜூன் பத்திரிகையாளராக நடித்திருந்தார். நடிகை மீனா மற்றும் ரமேஷ் அரவிந்த் ஜோதிகா நாகேஷ் லட்சுமி மணிவண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

இசைப்புயல் ஏஆர் ரகுமான் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். வழக்கமான ஆக்சன் காட்சிகள் இல்லாமல் யதார்த்தமான ஒரு கேரக்டரில் அர்ஜூன் மென்மையான நடிப்பை வழங்கியிருந்தார். தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மறக்க முடியாத படங்களில் ரிதம் ஒரு முக்கியமான படமாக இருந்து வருகிறது.

- Advertisement -

குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டவை. இந்த படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து தான் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரிதம் படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இது குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது, கால்நூற்றாண்டு கழிந்த பின்பும் ரிதம் படப் பாடல்கள் கொண்டாடப்படுவதை புன்னகையோடு பார்க்கிறேன். இசை மொழிக்கு அழகு தருகிறது. மொழியும் இசைக்கு ஆயுள் தருகிறது. ஐந்து பாடல்களுக்கும் ஐம்பூதங்களை உள்ளடக்கமாக்கியவர் இயக்குனர் வசந்த். நல்லிசை நல்கியவர் ஏ ஆர் ரகுமான்.

- Advertisement -

நதியே நதியே பாடலில் தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம், தண்ணீர்க் கரையில் முடிக்கிறோம் என்ற வரிகளை தமிழன்பர்கள் இன்றும் மந்திரம் போல் ஓதுகிறார்கள். காற்றே என் வாசல் வந்தாய் பாடலில் பூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில் காதலர் வாழ்க, பூமிக்கு மேலே வான் உள்ள வரையில் காதலும் வாழ்க என்ற வரிகளை இன்றைய 20 வயதுகள் இதழோடு இதழ் சேர்த்து உச்சரிக்கின்றன.

நல்ல பாடல்கள் தேன் போல கெட்டுப் போவதில்லை. படம் மறந்து போனாலும் பாடல்கள் மறப்பதில்லை. காடழிந்து போனாலும் விதைகள் அழிந்து போவதில்லை என்று கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த ரிதம் படப் பாடல்கள் குறித்த பதிவை செய்து இருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்