- Advertisement -
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்து கூறியதாவது, தேவா ஒரு நல்ல ஓவியர். இது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. சென்னை தொலைக்காட்சியின் ஓவியராக தான் அவர் அரசு ஊழியராக பணியாற்றினார் என்ற உண்மை பல பேருக்கு தெரியாது. அவரை கானா பாட்டு கானா பாட்டு என்கிறீர்களே? அவரை போல மெல்லிசை போட்டவர்கள் உண்டா? என்று கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார். தேவா ஒரு ஓவியர். முன்னாள் அரசு ஊழியர் என்ற 2 முக்கிய தகவல்களை கவிஞர் வைரமுத்து வெளிப்படுத்தியிருப்பது ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.





