- Advertisement -
Homeபொழுதுபோக்குகூகுள் குட்டப்பா பட நடிகர், பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்...

கூகுள் குட்டப்பா பட நடிகர், பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு – இதுக்கெல்லாம் பிரச்னை பண்ணலாமா ப்ரோ?

- Advertisement -

விஜய் டிவியில் 2017ம் ஆண்டு முதல் கடந்த 8 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் 7 ஆண்டுகளாக நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில், கடந்த 2024ம் ஆண்டில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இனி ஆண்டுதோறும் இவரே பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டில் நடந்த விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தர்ஷன். இலங்கையை சேர்ந்த தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நல்லவிதமாக போட்டிகளில் பங்கேற்று பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். பல டாஸ்க் களில் அவரே வெற்றி பெற்று முன்னிலை வகித்தார்.

- Advertisement -

பிக்பாஸ் துவங்கிய 50 நாட்களிலேயே தர்ஷன்தான் டைட்டில் வின்னர் என்று பேசிய நிலையில், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற கான்செப்ட்டில் கடைசி நேரத்தில் மற்றொரு போட்டியாளர் முகின் என்பவரை விஜய் டிவி பிக்பாஸ் டைட்டில் வின்னராக அறிவித்தது. இது பார்வையாளர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது.

இதையடுத்து கடந்த 2022ம் ஆண்டில் கூகுள் குட்டப்பா என்ற படத்தில் தர்ஷன் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ் லாஸ்லியா நடித்திருந்தார். இந்த படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. எனினும் தர்ஷன் விளம்பர படங்கள் மற்றும் மற்ற மொழி படங்களில் வாய்ப்பை தேடி வந்தார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் தர்ஷன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தர்ஷன் குடியிருக்கும் வீட்டின் அருகே காரை பார்க்கிங் செய்வது தொடர்பாக ஐகோர்ட் நீதிபதி மகனுக்கும் நடிகர் தர்ஷனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு பெண் மற்றும் நீதிபதியின் மகன் காயம் அடைந்த நிலையில் இருவரும் அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தன் நண்பர்களுடன் சேர்ந்து நடிகர் தர்ஷன், நீதிபதியின் மகன் மற்றும் அவரது மனைவி மற்றும் மாமியாரை தாக்கியதாக ஜே ஜே நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல் நடிகர் தர்ஷன் தரப்பில் இருந்தும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இருதரப்பு புகார் குறித்தும் விசாரணை மேற்கொண்ட போலீசார் நடிகர் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடிகர் தர்ஷன் மற்றும் அவரது நண்பர் லோகேஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்