- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜின் மனைவி போனி வர்மா கூறியதாவது, எனது கணவரின் துணிச்சலான கருத்துகளால் சினிமா துறையிலும் பல முன்னணி வணிக விளம்பரங்களிலும் அவருக்கு வர வேண்டிய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன. சில தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்து முன்பணம் கொடுத்த பிறகும் கூட படங்களில் இருந்து அவரை திடீரென விலக்கி விட்டார்கள். ஆனால் தொழில் லாபங்களை விடவும் தனது மனசாட்சிக்கு அவர் எப்போதும் முன்னுரிமை அளிக்கிறார் என்று நடிகர் பிரகாஷ்ராஜின் மனைவி போனி வர்மா அதில் கூறியிருக்கிறார்.





