கடந்த 2023ம் ஆண்டில் பொங்கல் பண்டிகையன்று அஜீத் நடிப்பில் துணிவு படம் வெளிவந்தது. இந்த படத்துக்கு பிறகு 8 மாத காலம் தாமதம் ஏற்பட்ட நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பு கடந்த அக்டோபரில் துவங்கியது. அஜர்பைஜானில் கடந்த 4 மாதங்களாக விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பை வரும் பிப்ரவரி இறுதிக்குள் நிறைவு செய்யும் அஜீத்குமார், அடுத்து மார்க் ஆண்டனி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே 63 என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிகை தபு அஜீத்குமாருக்கு ஜோடியாக நடிப்பதாக, சில தினங்களுக்கு முன்பே தகவல் வெளியானது.
சில ஆண்டுகளுக்கு முன் அஜீத்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த போதே, அந்த படத்தில் உதவி இயக்குநராக ஆதிக் ரவிச்சந்திரன் பணி செய்திருக்கிறார். அப்போது அஜீத்குமாரிடம் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு கதை சொல்லி இருக்கிறார்.
அந்த கதை நன்றாக இருப்பதாக கூறிய அஜீத்குமார், ஒரு பெரிய படம் செய்துவிட்டு வாங்க, நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம் என்று கூறியிருக்கிறார். அதற்காக காத்துக்கொண்டிருந்த ஆதிக் ரவிச்சந்திரன், மார்க் ஆண்டனி படம் ஹிட் ஆனதால், அஜீத்குமாரை எல்லா இடங்களில் புகழ்ந்து பாராட்டி, அவரது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.
முதலில் மார்க் ஆண்டனி படத்தின் இயக்குநராக மட்டும் இருந்த ஆதிக் ரவிச்சந்திரன், அஜீத்குமாருக்கு மிகவும் வேண்டியவராக நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து, பிரபுவின் மருமகனாகவும் ஆகி விட்டார். அன்னை இல்லம் குடும்பத்தை சேர்ந்த ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜீத்திடம் நல்ல முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.
அதனால் அஜீத் படத்தை வேற லெவலில் தரமான படமாக கொடுக்க வேண்டும் என்பதால், தபுவை கதாநாயகியாக தேர்வு செய்த ஆதிக் ரவிச்சந்திரன், அஜீத்குமாருக்கு வில்லனாக நடிக்க நடிகர் அரவிந்த் சாமி மற்றும் எஸ்ஜே சூர்யாவிடம் பேசி வருகிறார். அதுமட்டுமின்றி தெலுங்கில் உள்ள முன்னணி நடிகர் ஒருவரையும் இந்த படத்தில் நடிக்க வைக்க பிளான் செய்துள்ளார். இந்த படத்தின் கதைக்களம், 1980களின் காலகட்டமாக இருக்கும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.





