- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் ஹீரோவாக நடிக்க அந்த சம்பவம் தான் காரணம் - உண்மையை போட்டுடைத்த நடிகர் பிரதீப்...

நான் ஹீரோவாக நடிக்க அந்த சம்பவம் தான் காரணம் – உண்மையை போட்டுடைத்த நடிகர் பிரதீப் ரங்கநாதன்!

- Advertisement -

ஜெயம் ரவி காஜல் அகர்வால் கேஎஸ் ரவிக்குமார் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த படம் கோமாளி. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ஆட்டோ டிரைவராக பிரதீப் ரங்கநாதன் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார்.

தொடர்ந்து அவரே இயக்கி நடித்த 2வது படம் லவ் டுடே. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். மேலும் சத்யராஜ் ராதிகா சரத்குமார் யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். லவ்டுடே படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்தது. 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து தற்போது 2வது முறையாக பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து வெளிவந்துள்ள படம் டிராகன். இந்த படத்தை ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து டைரக்ட் செய்து இருக்கிறார். இந்த படம் கடந்த 21ம் தேதி வெளியானது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் ஹயாடு லோகர் கேஎஸ் ரவிக்குமார் பிஎல் தேனப்பன் ஜார்ஜ் மரியன் இந்துமதி இவானா மிஸ்கின் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் சில காட்சிகளில் படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவும் நடித்திருக்கிறார்.

டிராகன் படம் வெளியான4 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலை கடந்து மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. இன்னும் சில நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை அள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. துவக்கத்தில் டைரக்டராக இருந்த நடிகர் பிரதீப் ரங்கநாதன் திடீரென ஹீரோவாக மாறியது எப்படி என்று குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து நடிகர் பிரதீப் ரங்கநாதன் கூறியதாவது, கல்லூரியில் படித்த காலகட்டத்தில் நான் இயக்கிய முதல் குறும்படத்தில் மணி என்பவர் நடித்திருந்தார். அந்த குறும்படம் காலேஜ் முழுவதும் பெரிய அளவில் பிரபலமாகி விட்டது. எல்லோரும் வந்து கதாநாயகனாக நடித்த மணியை பாராட்டினார்கள். நிறைய பொண்ணுங்க எல்லாம் மணி கிட்ட வந்து சூப்பரா இருக்குடா செமையா இருக்குடா என்று பாராட்டி பேசினார்கள். ஆனால் நான் அப்போ அவன் பக்கத்தில் தான் நின்னுகிட்டு இருந்தேன். என்னை யாருமே கண்டு கொள்ளவில்லை.

சிறிது நேரம் கழித்து அவன், அடடா நீ இங்கதான் நிற்கறியா, இருடா பொண்ணுங்கள கூப்பிட்டு நீதான் டைரக்டருன்னு சொல்றேன் என்று சொன்னான். அப்படி நீ கூப்பிட்டு சொன்னா அதைவிட பெரிய அசிங்கம் வேறு எதுவும் இல்லை என்று சொல்லி நான் மறுத்து விட்டேன். அப்போதுதான் நான் ஒன்றை தெரிந்து கொண்டேன். டைரக்டராக இருப்பதைவிட நடிகராக இருப்பதுதான் அங்கீகாரம், ரொம்ப ஸ்பெஷலான விஷயமாக மக்கள்கிட்ட இருக்கும் அப்படீன்னு தெரிஞ்சுகிட்டேன். அதனாலதான் படத்தில் ஹீரோவா நடிக்கிறது முக்கியம் என்று அந்த நேர்காணலில் பிரதீப் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்