- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதி 68 அப்டேட்.. பிரேம்ஜி வெளியிட்ட ரகளையான மீமை பாருங்க.. மனுஷனுக்கு குசும்பு அதிகம்

தளபதி 68 அப்டேட்.. பிரேம்ஜி வெளியிட்ட ரகளையான மீமை பாருங்க.. மனுஷனுக்கு குசும்பு அதிகம்

- Advertisement -

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் கடந்த 19ஆம் தேதி வெளியானது. படம் விஜய் ரசிகர்களை திருப்தி செய்தாலும் பொதுவான ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. இருந்தாலும் முதல் நாள் 148 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஆனால் அதற்கடுத்த நாட்களுக்கான வசூல் குறித்த எந்த அறிவிப்பையும் படக்குழு இதுவரை வெளியிடவில்லை.

லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தனது 68ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் விஜய். வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வெங்கட் பிரபு என்றாலே ஜாலி ஜானரில் ட்விஸ்ட்டுகளுடன் பக்கா கமர்ஷியல் படத்தை வித்தியாசமான திரைக்கதையுடன் படத்தை தருபவர் என்பதால் இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

- Advertisement -

படத்தின் பூஜை சமீபத்தில் சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடந்து முடிந்தது. இந்தப் பூஜையில் விஜய், கங்கை அமரன், வெங்கட் பிரபு, பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி, பிரேம்ஜி அமரன், மோகன், வைபவ், ஜெயராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதன் மூலம் இந்தப் படமும் மிகப்பெரிய மல்டி ஸ்டாரர் படமாக உருவாகவிருப்பது உறுதியாகியிருக்கிறது.

பூஜையை முடித்த கையோடு ஒரு பாடலின் ஷூட்டிங் முடிக்கப்பட்டது. அந்தப் பாடலில் விஜய், பிரசாந்த் உள்ளிட்டோர் இணைந்து ஆடியதாகவும் அது நட்பு சம்பந்தப்பட்ட பாடல் என்றும்; அதனை ராஜுசுந்தரன் கோரியோகிராஃப் செய்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த ஷூட்டிங்கை முடித்த படக்குழு அடுத்ததாக வெளிநாட்டுக்கு சென்றிருப்பதாகவும் ஒரு தகவல் உலாவிக்கொண்டிருக்கிறது.

- Advertisement -

வெங்கட் பிரபு படம் என்றாலே அதில் பிரேம்ஜி அமரன் இருப்பார் என்பது இந்தப் படத்திலும் உறுதியாகியுள்ளது. இப்படத்தில் பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்நிலையில் பிரேம்ஜி அமரன் தண்ணி கேன் போடுவது போன்ற ஒரு மீமை பகிர்ந்திருந்தார். அந்த மீமை ரீ ட்வீட் செய்திருக்கும் பிரேம்ஜி அமரன் சிரிக்கும் எமோஜியை பதிவிட்டிருக்கிறார்.

இந்த தண்ணி கேன் போட வந்தேன் என்னை பிடிச்சிட்டு வந்துட்டாங்க என்ற வசனம் விக்ரம் படத்தில் காயத்ரியிடம் ஒரு இளைஞன் பேசுயதிலிருந்து ஃபேமஸ் ஆனது. அதனையடுத்து அந்த வசனத்தை வைத்து பலரும் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரேம்ஜியை வைத்தும் வந்திருக்கிறது. இந்தப் படத்தில் பிரேம்ஜிக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் இருக்கும் என்று ரசிகர்கள் யோசித்திருக்கும் சூழலில் இந்த மீம் பலரையும் ரசித்து சிரிக்க வைத்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்