- Advertisement -
Homeபொழுதுபோக்குஇசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி - சிவோஹம் பாடலுக்கு எழுந்து நின்று கைதட்டிய பாரதப் பிரதமர்...

இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி – சிவோஹம் பாடலுக்கு எழுந்து நின்று கைதட்டிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி!

- Advertisement -

இசையில் ஞானியாக விளங்கும் இளையராஜாவுக்கு, மத்தியில் ஆளும் பாஜக அரசு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கி கௌரவித்தது. தொடர்ந்து இளையராஜா இசையில் தொடர்ந்து பல சாதனைகளை நிகழ்த்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி அவர் லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில் வேலியண்ட் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்து சாதனை படைத்தார்.

தமிழ் சினிமாவில் இசையில் இளையராஜா கடந்த 50 ஆண்டுகளாக சக்ரவர்த்தியாக இருந்து வருகிறார். மிக விரைவில் தமிழக அரசு சார்பில், இளையராஜாவுக்கு அரை நூற்றாண்டு சாதனைகளை பாராட்டி அவருக்கு பாராட்டு விழா நடத்த உள்ளது. இந்நிலையில் இன்று தமிழ்நாட்டுக்கு வந்திருந்த பிரதமர் மோடி முன்னிலையில் இளையராஜா இசை நிகழ்ச்சி அரங்கேற்றம் நடந்தது.

- Advertisement -

தமிழ்நாட்டுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணமாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். அதில் 3வது நாளான இன்று அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோவில் வளாகத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது.

கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் திருக்கோயில் வளாகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி நினைவு நாணயம் வெளியிட்டு உரையாற்றினார். முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் திருவுடையார் கோயில் கட்டத் தொடங்கிய 1000வது ஆண்டு விழா தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற 1000வது ஆண்டு விழா நிறைவு விழாவில் கலந்து கொண்ட பாரத பிரதமர் மோடி நினைவு நாணயத்தை வெளியிட்டார்.

- Advertisement -

இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் இளையராஜா தனது இசைக்குழுவினருடன் இசை நிகழ்ச்சியை மேடையில் நிகழ்த்தினார். திருவாசகத்திற்கு புதிய இசையமைத்து கலை நிகழ்ச்சியையும் நடத்தினார். அதன் தொடக்கமாக ஓம் சிவோஹம் என்ற பாடலை இளையராஜா இசையமைத்து அவரது குழுவினர் மேடையில் பாடினர். அந்தப் பாடலை கைவிரல்களால் தாளம் தட்டி பிரதமர் மோடி ரசித்துக் கொண்டிருந்தார்.

ஓம் சிவோஹம் பாடலை இளையராஜா இசையமைத்து முடித்த போது பிரதமர் மோடி எழுந்து நின்று கைதட்டி இளையராஜாவை பாராட்டு செய்தார். மேலும் இந்த விழாவில் சோழிஸ்வரருக்கு திருவாசகம் சிம்பொனியையும் இளையராஜா இசைத்தார். பார்வையாளர்கள் அனைவரும் இளையராஜாவின் இசையில் மெய் மறந்து ரசித்தனர். பிரதமர் மோடியும் இளையராஜாவின் இசையை வெகுவாக ரசித்து பார்த்தார். இசை நிகழ்ச்சியை முடித்த பிறகு இளையராஜா, வாய்ப்பளித்த பிறகு மோடி அவர்களுக்கு நன்றி என மகிழ்ச்சியாக கூறினார்.

- Advertisement -

சற்று முன்