- Advertisement -
Homeபொழுதுபோக்குமூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பில் தொடர்ந்து நெருக்கடி தரும் நாயகி நயன்தாரா, பயங்கர கடுப்பில் இயக்குனர்...

மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பில் தொடர்ந்து நெருக்கடி தரும் நாயகி நயன்தாரா, பயங்கர கடுப்பில் இயக்குனர் சுந்தர் சி – கடைசியில் அது நடந்துடுமோ?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. சர்ச்சையும் பிரச்னையும் நடிகை நயன்தாராவுக்கு நகமும் சதையும் போல எப்போதுமே தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. வழக்கமாக அவர் ஒரு படத்தில் நடிக்க ஏகப்பட்ட கண்டிசன்களை போடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இப்போது மூக்குத்தி அம்மன் படத்திலும் அதே பிரச்னைகளை செய்திருக்கிறார்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா அம்மனாக நடிக்கும் படம் மூக்குத்தி அம்மன் 2. இந்த படத்தின் துவக்க விழா கடந்த 6ம் தேதி சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. அதன்பிறகு படத்தின் பிரமோ ஷூட்டிங் நடந்தது. அப்போது காஸ்ட்யூம் விஷயத்தில் உதவி இயக்குனரை நடிகை நயன்தாரா திட்டிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

சுந்தர் சி சொன்ன சில காஸ்ட்யூம் ஆடைகளை கொண்டு வந்து உதவி இயக்குனர் தந்திருக்கிறார். அம்மனாக நடிக்க வேண்டிய காட்சிகளில் அணிய வேண்டிய அந்த ஆடைகளை அணிய நயன்தாரா மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து சுந்தர் சியிடம் சொன்ன போது, கட்டாயம் அந்த ஆடைகளை அணிந்துதான் நயன்தாரா நடிக்க வேண்டும் என்று உறுதியாக கூறிவிட்டார்.

இந்த விஷயத்தில் சுந்தா் சி மீது இருந்த கோபத்தை எல்லாம் அந்த காஸ்டியூம் பொறுப்பை பார்த்த உதவி இயக்குனர் மீது நயன்தாரா கொட்டித் தீர்த்திருக்கிறார். அதனால் விரக்தியும் மன உளைச்சலும் அடைந்த அந்த உதவி இயக்குனர் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் இருந்தே விலகி விட்டார்.

சென்னையை தொடர்ந்து பொள்ளாச்சியில் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பை நடத்த சுந்தர் சி ஏற்பாடுகளை செய்தார். ஆனால் 2 குழந்தைகளின் தாய் நான். அதனால் வெளியூர் படப்பிடிப்பு எல்லாம் என்னால் வர முடியாது. சென்னையில் மட்டுமே இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தினால் தான் நான் வந்து நடிப்பேன் என்று நயன்தாரா கூறிவிட்டார்.

அதனால் வேறுவழியின்றி தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கேட்டுக்கொண்டதால் இப்போது சென்னையில் உள்ள ஆலம்பாக்கம் பொன்னியம்மன் கோவில் நஸ்ராத் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஷூட்டிங்கை சுந்தர் சி நடத்தி வருகிறார். ஆனால் சுந்தர் சி ஸ்டார் நடிகர் நடிகைகளை நம்பாமல் தன்னை நம்பி படம் எடுத்து வெற்றி பெற்று வருபவர். அதனால் நயன்தாரா தொடர்ந்து இப்படியே அட்ராசிட்டி செய்தால், அவரை உடனடியாக நீக்கி விட்டு தமன்னா போன்றவர்களை நாயகியாக்கி இந்த படத்தை இயக்கும் முடிவெடுக்கவும் சுந்தர் சி தயங்க மாட்டார் என்று கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது.

சற்று முன்