- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்க்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... தயாரிப்பாளரே கூறிவிட்டதால் எகிறும் எதிர்பார்ப்பு...

பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்க்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… தயாரிப்பாளரே கூறிவிட்டதால் எகிறும் எதிர்பார்ப்பு…

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஜெய் பீம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஞானவேல் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் இதன் சூட்டிங் நடத்தப்பட்டது.

 

இதில் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காவல்துறை பின்னணியில் இந்த திரைப்படத்தை ஞானவேல் எடுத்திருக்கிறார். இதன் டீசரில், ரஜினி கூறிய பஞ்ச் டயலாக் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது.

 

தற்போது வேட்டையன் சூட்டிங் முடித்துவிட்டு ரஜினிகாந்த் துபாய் சென்றிருக்கிறார். அங்கு சிறிது காலம் ஓய்வெடுக்கும் சூப்பர் ஸ்டார், அடுத்ததாக கூலி திரைப்படத்தில் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கம் இந்த திரைப்படத்திற்கான பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இதன் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதற்கு அனிருத் இசையமைக்கிறார். தங்கக் கடத்தலை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. இருப்பினும் தனது முந்தைய திரைப்படங்களிலிருந்து, கூலி திரைப்படம் மொத்தமாக மாறுபட்டு இருக்கும் என்று லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கூறியிருந்தார்.

 

கூலி திரைப்படத்திற்குப் பிறகு, ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இதற்கான கதை எழுதும் வேலையில் நெல்சன் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போக மாரி செல்வராஜ் கதையிலும் ரஜினி நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறப்பட்டது.

 

இப்படியான சூழலில் வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த நிறுவனத்தின் அடுத்த திரைப்படமான PT சார் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ரஜினிகாந்தை சந்தித்து ஒரு திரைப்படத்தில் வேலை செய்யலாம் என்று கூறி இருந்தேன். அவரும் வேல்ஸ் நிறுவனத்தின் கீழ் ஒரு படத்தில் நடிக்கலாம் என்று தெரிவித்தார். விரைவில் நாங்கள் இணைவோம் என்று நம்புகிறோம் என தெரிவித்திருக்கிறார்.

சற்று முன்