- Advertisement -
Homeபொழுதுபோக்குசூப்பர் ஹிட் படங்களை தந்த தெலுங்கு பட இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி - போட்றா...

சூப்பர் ஹிட் படங்களை தந்த தெலுங்கு பட இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி – போட்றா வெடிய… இந்த காம்போ இப்பவே தூள் கிளப்புதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் எப்படிப்பட்ட கேரக்டரை தந்தாலும் அதில் நடிக்கும் திறமை மிக்கவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என அழைக்கப்படும் விஜய் சேதுபதி ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் தினமும் ரூ. 250 சம்பளத்துக்கு நடித்தவர். எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி புதுப்பேட்டை நான் மகான் அல்ல வெண்ணிலா கபடிக்குழு படங்களில் சில காட்சிகளில் வந்து சென்றிருப்பார்.

ஆனால் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய் சேதுபதியை இயக்குனர் சீனு ராமசாமி கதாநாயகன் ஆக்கினார். தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ரம்மி சூது கவ்வும் பீட்சா இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற விஜய் சேதுபதி ஒரு கட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார்.

ஹீரோ வில்லன் கேமியோ கெஸ்ட் ரோல் என சினிமாவில் எந்தவிதமான நடிப்பிலும் தன்னை பொருத்திக் கொள்ளும் விஜய் சேதுபதிக்கு அவரது 50வது படம் மகாராஜா மாபெரும் வெற்றியை கொடுத்தது. குரங்கு பொம்மை பட இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய இந்த படம் அவருக்கு கம்பேக் படமாகவும் அமைந்து பெரிய முன்னிலையை பெற்றுத் தந்தது.

இப்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஆகாச வீரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் சேதுபதி அடுத்து சுந்தரபாண்டியன் பட இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குனர் பாலாஜி பரணிதரன் ஆகியோர் இயக்கும் படங்களில் நடிக்கிறார். இப்போது மேலும் ஒரு படத்திலும் நடிக்க கமிட் ஆகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத். இவர் தெலுங்கில் இயக்கிய படத்தை தான் நடிகர் பிரபுதேவா போக்கிரி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து இயக்கினார். விஜய் நடித்த படங்களில் போக்கிரி படம் மிகப்பெரிய வெற்றிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் அந்த படத்தின் தெலுங்கு வெர்சன் இயக்குனர் பூரி ஜெகன்நாத் தான்.

இப்போது விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு படத்தை பூரி ஜெகன்நாத் டைரக்ட் செய்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் இந்த படம் உருவாகிறது. இயக்குனர் பூரி ஜெகன்நாத் சொன்ன ஆக்சன் கதை ரொம்பவும் பிடித்துப் போனதால் விஜய் சேதுபதி உடனே ஓகே சொல்லி இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக பெரிய வெற்றிப் படங்களாக தராத நிலையில் பூரி ஜெகன்நாத், இந்த படத்தை மாஸ் ஹிட் படமாக கொடுப்பார் என தமிழ், தெலுங்கு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சற்று முன்