- Advertisement -
Homeபொழுதுபோக்குமுரட்டு சிங்கிளாக களத்தில் இறங்கும் புஷ்பா 2 - டிசம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும்...

முரட்டு சிங்கிளாக களத்தில் இறங்கும் புஷ்பா 2 – டிசம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் எத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் தெரியுமா? – பட்டைய கெளப்பும் லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற டிசம்பர் 5ம் தேதி புஷ்பா 2 படம் வெளியாகிறது. தெலுங்கு படமான புஷ்பா 2, தமிழ் மலையாளம் கன்னடம் இந்தி பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. புஷ்பா முதல் பாகத்தை விட 2ம் பாகம் வேற லெவலில் ரசிகர்களை கவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தில் நடிகை ஸ்ரீ லீலா ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டிருக்கிறார். புஷ்பா 1ல், நடிகை சமந்தா ஆடிய குத்தாட்டம் போல இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தை பெற்றுள்ளது. படம் ரிலீஸான பின்பு, பாடல் பெரிய அளவில் டிரண்டிங் ஆக அதிக வாய்ப்புள்ளது.

புஷ்பா 2 பிரமோசன் பணிகளில், படக்குழுவினர் கடந்த ஒரு மாதமாக தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஐதராபாத் என முக்கிய நகரங்களுக்குச் சென்று ரசிகர்களை நேரில் சந்தித்து படம் குறித்த வைப்பை அதிகரிக்க செய்து வருகின்றனர். குறிப்பாக அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனாவை பார்த்து ரசிகர்கள் பலத்த உற்சாகமடைகின்றனர்.

சென்னையில் சில தினங்களுக்கு முன் நடந்த புஷ்பா 2 பிரமோசன் நிகழ்ச்சியில் நடிகர் அல்லு அர்ஜூன், நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா மற்றும் படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அல்லு அர்ஜூன், நான் சென்னை தி நகர் பையன், நான் என்ன சாதனைகள் செய்தாலும், வெளிநாடுகள் போனாலும் அந்த பெருமை எல்லாம் என் சொந்தங்களான உங்களுக்குதான் என்று பேசி அசத்தினார்.

இந்நிலையில் புஷ்பா 2 படம் உலகம் முழுவதும் மொத்தம் 12 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் ஐமேக்ஸ் தியேட்டர்களின் எண்ணிக்கை, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகளவில் புஷ்பா 2 படம், ஐமேக்ஸ் தியேட்டர்களில் அதிக எண்ணிக்கையில் வெளியாக உளளது.

அதே போல் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 800 தியேட்டர்களில் புஷ்பா 2 படம் ரிலீஸாக உள்ளது. அந்த நாளில் புதிய படங்கள் வருகை, பெரிய படங்கள் எதுவும் தியேட்டர்களில் ஓடாத நிலையில் தமிழ்நாட்டில் முரட்டு சிங்கிளாக களத்தில் புஷ்பா 2 இறங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. சூர்யா நடித்த கங்குவா படம் 11 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸானதாக கூறப்பட்ட நிலையில், அதை விட ஆயிரம் தியேட்டர்கள் கூடுதலாக புஷ்பா 2 ரிலீஸ் செய்யப்படுகிறது.

சற்று முன்