தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை 2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி துவங்கிய போது தமிழக அரசியல் கட்சிகள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எம்ஜிஆர் விஜயகாந்த் தவிர வேறு எந்த நடிகருமே தமிழக அரசியல் களத்தில் பெரிய பரபரப்பை மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
அதனால் கமல்ஹாசன் சரத்குமார் டி ராஜேந்தா் கே பாக்யராஜ் கார்த்திக் போல விஜயும் அரசியலுக்கு வருகிறார் என்றுதான் நினைத்தனர். விஜய் சென்ற இடம் எல்லாம் திரண்ட கூட்டத்தை பார்த்து, இது வேடிக்கை பார்க்க வந்த கூட்டம். ஓட்டுகளாக மாறாது என்றும் கிண்டலடித்தனர். ஆனால் அந்த விமர்சனமே மக்களிடையே கோபத்தை உருவாக்கி கடந்த தேர்தலில் விசில் சின்னத்தை அழுத்தி அழுத்தி 108 இடங்களில் தவெக கட்சியை ஜெயிக்க வைத்து விட்டனர்.
இப்போது விஜய் தமிழக முதல்வராக உள்ள நிலையில் பல கட்சிகளை சேர்ந்தவர்கள் தவெகவில் ஆர்வமாக இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில் இப்போது நடிகர் மற்றும் நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் தவெக கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் தமிழக மக்களை தெருநாய்களுடன் ஒப்பிட்டு பேசிய அவருக்கு பலத்த எதிர்ப்பும் வலுத்து வருகிறது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக தன்னை தவெக அறிவிக்க வேண்டும். நான் எம்எல்ஏ ஆனபிறகு துணை முதல்வர் பதவியை தனக்கு விஜய் வழங்க வேண்டும் என்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் கேட்டதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. இது தவெக கட்சியின் மூத்த நிர்வாகிகள் அமைச்சர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதுகுறித்து கேள்விப்பட்ட தமிழக முதல்வர் விஜய், பிரபல நடிகர் என்பதற்காக வந்தவுடன் எம்எல்ஏ அமைச்சர் துணை முதல்வர் போன்ற பதவிகளை யாருக்கும் தூக்கி கொடுத்துவிட முடியாது. கட்சிக்காக ஆரம்பத்தில் இருந்து உழைத்தவர்கள் என்னுடன் துணை நின்றவர்கள் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களுக்கு மட்டுமே பதவிகளும் பொறுப்புகளும் வழங்கப்படும்.
தவெக கட்சியில் இணைவதற்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் கட்சிக்காக மக்களுக்காக அவர் பாடுபட வேண்டும். அவர்கள் உண்மையாக இருந்து உழைக்க வேண்டும். அதன்பிறகு அவர்களை பதவிகள் தேடி வரும். கட்சிக்குள் வரும்போதே எம்எல்ஏ அமைச்சர் துணை முதல்வர் என்ற ஆசையோடு வருபவர்களுக்கு தவெகவில் நிச்சயம் இடமில்லை என்று அதிரடியாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.





