- Advertisement -
Homeபொழுதுபோக்குசிங்கத்தை கூண்டுல அடைச்சு வெச்சாக் கூட பார்க்க கூட்டம் வரும், இத்தனை வருஷமா மக்களுக்கு வேடிக்கை...

சிங்கத்தை கூண்டுல அடைச்சு வெச்சாக் கூட பார்க்க கூட்டம் வரும், இத்தனை வருஷமா மக்களுக்கு வேடிக்கை காட்டியிருக்கோம் – விஜய் குறித்து பேசிய இயக்குனர் ராஜகுமாரன்!

- Advertisement -

புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு பிறகு தமிழக அரசியல் களத்தில் நேரடியாக இறங்கி பெரிய வரவேற்பை பெற்றவர் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த். அவருக்கு பிறகு அதே ஆதரவு உற்சாகமான வரவேற்பு நடிகர் விஜய்க்கு மக்கள் மத்தியில் இப்போது கிடைத்து வருகிறது. ஆனால் அது எல்லாம் ஓட்டாக மாறாது என்றுதான் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

முன்னணி நட்சத்திர நடிகராக 32 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்து வரும் நடிகர் விஜய்க்கு இதுவரை ஆதரவாக பேச யாரும் முன்வரவில்லை. அதே நேரத்தில் அவரது அரசியல் கட்சியை கொள்கையை பலரும் கடுமையாக விமர்சித்து பேசி வருகின்றனர். கருணாஸ் சீமான் சரத்குமார் உள்ளிட்டோர் வரிசையில் இயக்குனர் ராஜகுமாரனும் விஜய் பற்றி அவ்வப்போது கடுமையாக பேசுகிறார்.

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் ராஜகுமாரன் கூறியதாவது, எப்போதுமே பிரபலமானவர்களை பார்க்க மக்கள் கூட்டம் திரண்டு வருவது இயல்புதான். இது விஜய்க்கு மட்டும் நடப்பது இல்லை. விஜய்க்கு கூட்டம் வருகிற இடத்தில் எல்லாம் நீங்கள் ஒரு சிங்கத்தை கூண்டில் வைத்தாலும் கூட அதையும் பார்க்க மக்கள் கூட்டம் வரும். இந்த ரெண்டுக்கும் பெரிய வித்யாசம் எதுவும் இல்லை.

கூட்டம் கூடுவதால் வேடிக்கை பார்க்கப்படுகிற பொருள் நாமாக இருக்கிறோம். கடந்த 30 வருஷமாக என்னை வேடிக்கை பாருன்னு என்று நாம்தான் அவர்களிடம் காமிச்சிருக்கோம். மறுபடியும் அவன் அதைத்தான் பார்க்க வருவான். ஒரு உபயோகமான பொருளாக நாம் இல்லை. கடந்த 30 வருஷமாக யாருக்கும் உபயோகமா இருந்தது இல்லே. இதுதான் நாம் புரிஞ்சுக்க வேண்டிய உண்மையான விஷயம்.

- Advertisement -

தமிழக முதல்வர் ஸ்டாலின் 35 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார். நிறைய கட்சிக்காக பாடுபட்டு இருக்கிறார். அவர் சிறைக்கு சென்றிருக்கிறார். நிறைய அடிபட்டு இருக்கிறார். ஆனால் விஜய் அப்படி எதுவும் மக்களுக்காக கஷ்டப்பட்டு இருக்கிறாரா? சினிமாவில் நடிக்கும் போது கூட அவருக்கு ஒரு சிறிய கீறல், காயம் ஏற்பட்டது இல்லை.

அதனால் அரசியல் என்பது நிஜம். சினிமா என்பது வெறும் கற்பனை என்று இயக்குனர் ராஜகுமாரன் அந்த நேர்காணலில் விஜய் குறித்து ஆவேசமாக பேசியிருக்கிறார். ராஜகுமாரனின் மனைவி தேவயானி பிரண்ட்ஸ் மற்றும் நினைத்தேன் வந்தாய் ஆகிய 2 படங்களில் விஜயுடன் நடித்திருக்கிறார். நடிகர் விஜய் குறித்து மட்டுமின்றி கமல் விக்ரம் துருவ் விக்ரம் இயக்குனர் மகேந்திரன் என பலரையும் ராஜகுமாரன் கடுமையாக விமர்சிப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்