- Advertisement -
Homeபொழுதுபோக்குகாக்கா - கழுகு பஞ்சாயத்து அரசியலுக்கு போனாலும் நீடிக்குமா? அட இப்படி ஒரு விவகாரம் இருக்குதுன்னு...

காக்கா – கழுகு பஞ்சாயத்து அரசியலுக்கு போனாலும் நீடிக்குமா? அட இப்படி ஒரு விவகாரம் இருக்குதுன்னு யாருமே யோசிக்கலையா… – விமர்சனங்களை தவிர்க்க ரஜினியே இதற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் டைரக்ட் செய்தவர் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர். நான் சிவப்பு மனிதன் என்ற படத்தை ரஜினிகாந்த் வைத்து இயக்கினார். அந்த வகையில் ரஜினிக்கும் எஸ்ஏ சந்திரசேகருக்கும் நல்ல நட்பு நீடிக்கிறது. எஸ்ஏசி மகன் விஜய் நடிக்க வந்த புதிதில் நடிகர் ரஜினிகாந்தின் மிகத் தீவிரமான ரசிகராகத் தான் இருந்தார்.

அண்ணாமலை படத்தில் ரஜினிகாந்த் பேசிய வசனத்தை பேசி நடித்துக் காட்டி தான் தனது அப்பா எஸ்ஏ சந்திரசேகர், அம்மா ஷோபா சந்திரசேகரிடம் சினிமாவில் நடிக்கவே விஜய் அனுமதி கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நடிகர் விஜய் ஒரு கட்டத்தில் மிகப்பெரிய நடிகராக வளர்ந்து நடிகர் ரஜினிகாந்தை விடவும் அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார்.

- Advertisement -

அதேபோல் ரஜினி படத்தை காட்டிலும் விஜய் படங்களுக்கு ரசிகர் கூட்டமும், வசூலும் ரஜினிகாந்த்தை விட விஜய் படங்களுக்கு பல மடங்கு அதிகரித்தது. அதனால் ஒரு கட்டத்தில் வசூல் மன்னனாக இருக்கும் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று தமிழ் சினிமாவில் ஒரு விவகாரம் கிளம்பியது. இது பெரிய அளவில் வைரலாகி ரஜினி, விஜய் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் மோதல் போக்கை ஏற்படுத்தியது.

அந்த நேரத்தில் ஜெயிலர் பட விழாவில் பேசிய ரஜினிகாந்த், காக்கா கழுகு கதை சொல்லி மேலும் விஜய் ரசிகர்களை ஆத்திரமூட்டினார். இந்த சூழ்நிலையில் லியோ பட விழாவில் பேசிய நடிகர் விஜய், சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும்தான். நான் தளபதியாக மட்டுமே என்றும் இருக்க விரும்புகிறேன் என்று பேசி அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இப்போது நடிகர் விஜய் அரசியலில் முழு தீவிரம் காட்டி வருகிறார்.

- Advertisement -

தி கோட் படத்தை தொடர்ந்து விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிக்க இருக்கிறார். அதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் வரும் 2026 சட்டசபை தேர்தலை எதிர் கொள்ள தயாராகி வருகிறார். ஆனால் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதல் அதிலும் ரஜினி மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் வராமல் ஏமாற்றி விட்டார். ஆனால் விஜய் வந்து விட்டார்.

அதனால் இப்போது ரஜினி ரசிகர்களாக உள்ள பலரும் விஜய் கட்சிக்கு வர தயாராகி வருகின்றனர். நாளை ஒருவேளை விஜய் பெரிய அளவில் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வரானால், அது ரஜினியை இன்னும் விமர்சிக்க அதிக வாய்ப்பாகிவிடும் என்று கூறப்படுகிறது. அதனால் வருகிற சட்டசபை தேர்தலில் ரஜினி தனது ரசிகர்களை, விஜய்க்கு ஓட்டு போட சொல்வாரா அல்லது திமுக பக்கம் சார்ந்து நிற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜய்க்கு ரஜினிகாந்த் தனது ஆதரவை தெரிவித்தால் நன்றாக இருக்கும் என்ற பேச்சு எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்