- Advertisement -
Homeபொழுதுபோக்குதண்ணி அடிக்க கூப்பிட்ட ரஜினி... அந்த விஷயத்தில் ரஜினி நொந்து போயிட்டார் - பிரபல டாக்டர்...

தண்ணி அடிக்க கூப்பிட்ட ரஜினி… அந்த விஷயத்தில் ரஜினி நொந்து போயிட்டார் – பிரபல டாக்டர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவின் உச்சம் நட்சத்திரமாக 72 வயதிலும் திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இதற்கு உதாரணம்அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ஒரே வாரத்தில் 400 கோடி வசூல் சாதனையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதே. இதனால் ரசிகர்கள் பலரும் ரஜினிதான் எப்போதும் வசூல் சக்கரவர்த்தி என புகழ்ந்து தள்ளி வருகின்றனர். ஆரம்ப காலத்தில் சின்னஞ்சிறு வேடங்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் பின்னாளில், தனது அசாதாரண திறமையாலும், வசீகரிக்கும் ஸ்டைல் மூலமாகவும் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். அதுவே அவரை சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்துக்கு சொந்தக்காரர் ஆக்கியது.

எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், ஏதேனும் ஒரு தீய பழக்கம் அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்துவிடும். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், மதுவுக்கு அடிமையாக இருந்த காரணத்தினால் உடல் ரீதியாக பல இன்னல்களைச் சந்தித்தார். இதை சமீபத்தில் நடந்த ஜெயிலர் ஆடியோ லாஞ்ச் விழாவில் குறிப்பிட்ட ரஜினிகாந்த், தான் மதுவுக்கு அடிமையாகாமல் இருந்திருந்தால், தற்போது இருக்கும் இடத்தை விட மிகப்பெரிய இடத்தில் இருந்திருப்பேன் என்றும், எனவே யாரும் மதுவுக்கு அடிமையாகாமல் இருக்கலாம் என்று பேசினார்.

- Advertisement -

இந்நிலையில் பிரபல மருத்துவர் காந்தராஜ் ரஜினி குறித்தும், அவர் உடனான அனுபவம் குறித்தும் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர், நடிகர் ரஜினியின் குடிப்பழக்கம் அவரது உடல்நிலை கெடுவதற்கு காரணமாக இருந்தது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் கடும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட ரஜினியை, சூட்டிங்கிலிருந்து மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். அவருக்கு முதலுதவிஅளிக்கப்பட்டு பின்னர் அமெரிக்கா சென்று தீவிர சிகிக்சைக்குப் பின் குணம் அடைந்ததாக கூறினார்.

மேலும், ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றுக்காக ரஜினியை அழைக்க அவர் அவர் வீட்டிற்கு வருவதாக கூறியிருந்தேன். அவரும் வரச்சொல்லியதால், அங்கு சென்றேன். ஆனால் அவர் வெளியே சென்றுவிட்டார். இதனால், நான் திரும்பி விட்டேன். இதே வேளையில் பார் ஒன்றில் இருந்த ரஜினிக்கு, என் குறித்த ஞாபகம் வந்துள்ளது. பின்னர் அவர் எங்கள் வீட்டிற்கு அழைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். நான் வீட்டிற்கு சென்றபோது ரஜினி அழைத்ததை கூறினார்கள். பின் அவருக்கு கால் செய்தபோது என்னை அங்கு அழைத்தார். இரவு 10 மணி ஆகிவிட்டதால் போகவில்லை. அடுத்த நாள் வருவதாக சொல்லிவிட்டு, ஷூட்டிங்கில் இருந்த ரஜினியை போய் பார்த்தேன். அப்போது ரஜினி, நீங்கள் குடிக்க மாட்டீங்களா என்று கேட்டார். நான் என் காசை போட்டு குடிக்க மாட்டேன் யாராவது வாங்கி கொடுத்தால் குடிப்பேன் என்று விளையாட்டாக சொன்னேன். இதைக் கேட்ட ரஜினி பயங்கரமாக சிரித்தார்.

- Advertisement -

தொடர்ந்து பேசிய மருத்துவர், ’16 வயதினிலே’ படத்திற்குப் பின், சினிமா ஸ்டார்களை நம்பியிருந்த காலம் மாறி, எதார்த்தமான கதைக்களமும் வாழ்வில் நடக்கும் சம்பவங்களையும் வைத்து படங்கள் வர தொடங்கியது. மேலும், ரஜினியை வைத்து நம்பி படம் எடுக்கலாம் என்ற நிலையும் வந்தது. ஏனெனில் ரஜினி படங்கள் நல்ல வசூல் செய்தன. சூப்பர் ஸ்டார் பட்டத்தை கொடுத்தது கலைப்புலி தானு தான். அந்த காலத்தில் ஓடிய படங்கள் எல்லாம் பட்டத்திற்காக ஓடவில்லை. எளிதாக கூப்பிடலாம் என்பதற்காகவே இந்த பட்டங்கள் எல்லாம் வழங்கப்பட்டன. ஒரு ஹீரோக்கு அளிக்கப்படும் பட்டங்களை நினைத்து பிற நடிகர்கள் எப்போதும் வருத்தப்பட்டதில்லை.

முன்பெல்லாம் தென்னிந்திய சினிமாக்களில் ஹீரோவாக வேண்டுமென்றால் அவர் சிவப்பாக நல்ல கலரிலும் நல்ல சுருட்டை முடியுடன் இருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் எந்த ஒரு அடையாளமும் இன்றி, மிகவும் எளிமையாக பரட்டை தலையுடன் வந்து, தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார் ரஜினி. எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல் போன்றவர்களை திரையில்தான் பார்க்க முடியும். ஆனால் சக மனிதாக தோன்றி ரஜினி பல ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார். மக்கள் அவரை நம்ம வீட்டு பையன் என நினைத்தனர் என்றார்.

சினிமாவுக்கு வரும் முன்பே ரஜினிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறிய மருத்துவர், அவரது அண்ணன்களே ரஜினியை வளர்த்து ஆளாக்கினர். ரஜினி கண்டக்ராக இருந்த காரணத்தால் அவர் மது குடிக்க பழகினார். மேலும், பள்ளி ஒன்றை கட்டிக் கொண்டிருந்தபோது, அவரை ஏமாற்றி விட்டனர். இதனால், மனம் உடைந்து ரஜினி நொந்து போயிட்டார். இதனால் யாரையும் நம்ப முடியாத சூழலுக்கு போயிட்டார். கண்டக்ராக இருந்து வந்ததால் அவரை எழுத, படிக்க கூட தெரியாது என ரஜினியை கேவலமாக நினைத்துவிட்டனர். ஆனால் ஆங்கில புத்தகம் கூட படிப்பார் என்றார்.

இறுதியாக அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த டாக்டர், சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு எதுக்கு அலையறீங்க? எல்லாரும் ஏன் அந்தப் பட்டத்தை வாங்க நினைக்கிறீங்க? வேற எதும் பட்டமே இல்லையா? அது என்ன பாரத் ரத்னாவா? அந்தப் பட்டம் இல்லையென்றால் வேற பட்டம் வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.

- Advertisement -

சற்று முன்