நடிகர் ரஜினிகாந்த் இப்போது தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி 170 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், தீபாவளிக்கு பிறகு 3ம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த படத்தை முடித்த பிறகு வரும் மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி 171 படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது. இதற்கான கதை, திரைக்கதை சார்ந்த எழுத்து பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். இதில் வில்லனாக, ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே நிறைய கால அவகாசம் இருப்பதால் அதற்குள் கோலமாவு கோகிலா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துவிட நெல்சன் திட்டமிட்டு அதறகான முயற்சிகளை மேற்கொண்டு இருந்தார். நெல்சன் இந்த படத்தில் நடிக்க எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம் என நயன்தாரா உறுதி கொடுத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பீஸ்ட் படத்தை இயக்கிய வகையில், வசூல் ரீதியாக அந்த படம் வெற்றிப் படம்தான். ஆனால், விமர்சன ரீதியாக அந்த படம் ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியது. அதனால், பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சனை, விஜய் ரசிகர்கள் கண்டபடி விமர்சித்தனர். அதுவும் பீஸ்ட் படத்தின் இறுதி காட்சிகள் பெரிய அளவில் கிண்டலடிக்கப்பட்டது.
இந்நிலையில், பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன், ரஜினி நடித்த ஜெயிலர் படத்தை இயக்கிய போது இந்த படமும் பீஸ்ட் போல சொதப்பி விடுமோ, ரஜினிக்கு ஏமாற்றம் தந்துவிடுமோ என ரஜினி ரசிகர்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால், ஜெயிலர் மிகப்பெரிய வெற்றியை பெற்று, ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
ஜெயிலர் படத்தின் 2ம் பாகம் எடுக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இப்போது திடீரென ரஜினியிடம் இருந்து அழைப்பு வர, நெல்சன் உடனடியாக நேரில் சென்று ரஜினியை சந்தித்து இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் படத்தை முடித்த உடனே, ஜெயிலர் 2 பாகம் படப்பிடிப்பை துவங்க வேண்டும். அதற்கான டிஸ்கசன் வேலைகளை இப்போதே ஆரம்பித்து விடுங்கள், சப்ஜெக்டை ரெடி பண்ணுங்க என நெல்சனுக்கு ரஜினி உத்தரவிட்டு இருக்கிறார்.





