- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமரன் திரைப்படத்தைப் பார்த்து அசந்து போன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... சிவகார்த்திகேயனை அழைத்து பாராட்டிய தருணம்......

அமரன் திரைப்படத்தைப் பார்த்து அசந்து போன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… சிவகார்த்திகேயனை அழைத்து பாராட்டிய தருணம்… நெகிழ்ந்துபோன கமல்ஹாசன்…

- Advertisement -

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் நகைச்சுவை திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தன்னை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்சன் ஹீரோவாக வலுப்படுத்தி வருகிறார்.

 

- Advertisement -

இதில் அவருக்கு மாவீரன் திரைப்படம் மிக முக்கியமான தருணம் என்று கூறலாம். தனது உடல் மொழியில் கொஞ்சம் கூட காமெடியை காட்டாமல், பயந்த ஸ்வாபம் மிக்க ஒரு இளைஞன், பிரச்சினையை கண்டால் தெறித்து ஓடுபவன் என அத்தனையையும் ஒரே பிரேமில் காட்டி இருந்தார் சிவகார்த்திகேயன்.

 

- Advertisement -

கோழையாக இருந்து வீரனாக மாறும் தருணத்திலும் அதற்கான நடிப்பை கொண்டு வந்து அசத்தினார். இந்த திரைப்படத்திற்கு முன்பு அவர் நடித்த டான் மற்றும் டாக்டர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் 100 கோடி ரூபாய் வசூல் குவித்தன. ஆனால் மாவீரன் திரைப்படம் அந்த உயரத்தை எட்டவில்லை.

 

இருப்பினும் அதனை விட எனக்கு இதுதான் பெரிய வெற்றி என்று மார்தட்டி கொண்டார் சிவகார்த்திகேயன். தற்போது தனது நடிப்பின் அடுத்த கட்டமாக தான் அவர் அமரன் படத்தில் நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க தன்னை ஒரு ராணுவ வீரனாக காட்டிக் கொண்டு அதற்கான கட்டு மஸ்தான உடலுடன் வந்து நின்றார் சிவகார்த்திகேயன்.

 

வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் முகுந்தனின் மனைவியான இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி வாழ்ந்திருக்கிறார். தீபாவளிக்கு ரிலீசான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

 

முதல் நாளில் மட்டும் 42 கோடி வசூல் ஈட்டியது இந்த திரைப்படம். இது சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் ஆகும். வார விடுமுறை என்பதால் எந்த திரையரங்குகளிலும் டிக்கெட்டில்லாமல் அரங்கம் நிறைந்த காட்சிகளாக அமரன் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தை பார்த்து உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோரை நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளார். இதன் புகைப்படங்களை படத்தின் தயாரிப்பாளரான கமலஹாசன் இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்