- Advertisement -
Homeபொழுதுபோக்குமிஷ்கின் கதையை தூக்கி போடச் சொன்ன நடிகர் விஷால்; துப்பறிவாளன் 2 என்ன ஆகப்போகுதோ? குழப்பத்தில்...

மிஷ்கின் கதையை தூக்கி போடச் சொன்ன நடிகர் விஷால்; துப்பறிவாளன் 2 என்ன ஆகப்போகுதோ? குழப்பத்தில் தவிக்கும் ரசிகர்கள்

- Advertisement -

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஷால் நடித்த படம் துப்பறிவாளன். விஷால் சினிமா பயணத்தில், இந்த படம் மிக முக்கியமான திருப்புமுனை படமாக அவருக்கு அமைந்தது. இதில் கணியன் பூங்குன்றன் என்ற டிடெக்டிவ் கேரக்டரில் விஷால் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

துப்பறிவாளன் படத்தில் பாக்யராஜ் முதல்முறையாக வித்யாசமான தோற்றத்தில், வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். ஆண்ட்ரியா, வினய் ஆகியோரின் கொடூரமான நடிப்பு, படத்துக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக இருந்தது. இந்த படத்தில் விஷாலின் உதவியாளராக நடிகர் பிரசன்னாவின் நடிப்பும் பெரிய அளவில் பாராட்டை பெற்றது.

- Advertisement -

துப்பறிவாளன் படத்தை பொருத்தவரை, ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து மிக கவனமாக செதுக்கி எடுத்திருந்தார் டைரக்டர் மிஷ்கின். இந்த படம் ஒவ்வொரு முறையும் ரசிகர்களுக்கு வெவ்வேறு விதமான உணர்வுகளை தரும் விதமான ஒரு அட்டகாசமான க்ரைம் திரில்லர் திரைப்படமாக இருக்கிறது என்றால் அது மிகையல்ல. இந்த படத்தை ரசிகர்கள் வரவேற்று கொண்டாடியதால் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

இதையடுத்து, துப்பறிவாளன் 2 படத்தை எடுக்க மிஷ்கின், நடிகர் விஷால் முடிவு செய்தனர். பல ஆண்டுகளுக்கு முன், லண்டனில் இந்த 2ம் பாகம் படத்துக்கான படப்பிடிப்பு நடந்தது. ஆனால் அப்போது மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது மோதலாக மாறியது.

- Advertisement -

இந்த சம்பவத்துக்கு பிறகு, படம் அப்படியே நின்றுபோனது. ஆனால், ஒருவரை ஒருவர் மிக மோசமாக பொது மேடைகளில் கண்டபடி திட்டிக்கொண்டனர். அருவருக்கத்தக்க வார்த்தைகளில் பேசிக்கொண்டனர். இது சினிமாத் துறையினர் வட்டாரத்திலும், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து நடிகர் விஷால், துப்பறிவாளன் 2 படத்தை நானே டைரக்ட் செய்கிறேன் என்று, பல ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தார். தற்போது துப்பறிவாளன் 2 படத்தை டைரக்ட் செய்வதற்கான ஆரம்ப கட்டப் பணியை விஷால் துவங்கி இருக்கிறார். இதற்காக முன்பு எடுக்கப்பட்ட 30 நாள் போர்ஷைன வேண்டாம் என்று தூக்கிப் போட்டுவிட்டு, புதிய கதை, புதிய ஸ்கிரிப்ட் என களத்தில் இறங்கி இருக்கிறார் நடிகர் விஷால். துப்பறிவாளன் 2 படத்தில் நடிக்கும் அனைவருமே புது நடிகர்கள்தான் என்றும், பழைய படத்தின் வாடை இல்லாமல் புத்தம் புதிதாக ஒரு கதையில், இந்த படத்தை எடுக்கவும் விஷால் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள், துப்பறிவாளன் 2 எப்படி உருவாகுமோ என்ற கவலையில், குழப்பத்தில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்