- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு தெரிஞ்சி அனிருத் லவ் பண்ண வாய்ப்பே இல்ல. அவருக்கு நேரமே இல்ல - ரஜினிகாந்த்...

எனக்கு தெரிஞ்சி அனிருத் லவ் பண்ண வாய்ப்பே இல்ல. அவருக்கு நேரமே இல்ல – ரஜினிகாந்த் மாஸ் ஸ்பீச்

- Advertisement -

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ் குமார் என பல்வேறு முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் தயாராகியுள்ள “ஜெயிலர்” திரைப்படமானது ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. ஏற்கனவே கடைசியாக சூப்பர் ஸ்டாரின் நடிப்பில் வெளியான சில படங்கள் தோல்வியை சந்தித்து இருந்த வேளையில் நெல்சனுக்கும் பீஸ்ட் படம் தோல்வியை தந்திருந்தது.

இதன் காரணமாக இவர்கள் இருவருக்குமே இந்த ஜெயிலர் படம் ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஜெயிலர் படத்திற்கான இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது.

- Advertisement -

இந்த ஜெயிலர் பட இசைவெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கு மேல் படத்தில் நடித்த நடிகர்கள் முதல் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அனைவரையும் பாராட்டி பேசியிருந்தார். அதோடு தனிப்பட்ட வகையிலும் பல்வேறு சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்து கொண்டிருந்தார். அந்த வகையில் அனிருத் குறித்து பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாக அவரின் உழைப்பை பாராட்டி இருந்தார்.

Anirudh

இந்நிலையில் அப்படி ரஜினிகாந்த் பேசும் போது அனிருத்தின் திருமணம் மற்றும் காதல் ஆகியவற்றை குறித்தும் பேசியிருந்தார். இது குறித்து ரஜினி கூறுகையில் : அனிருத் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 20 மணி நேரம் உழைத்து வருகிறார். அவரைப் போன்ற ஒரு பிள்ளையை பெற்றதற்கு அவர்களின் பெற்றோர் பெருமைப்பட வேண்டும். அனிருத்தின் பெற்றோரும் அவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிகளை எடுத்து வருகின்றார்கள்.

- Advertisement -

ஆனால் அவர்தான் வேலையிலேயே கவனம் செலுத்தி வருகிறார். நிச்சயமாக எனக்கு தெரிந்து அவர் காதலிக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் காதலிப்பவர்கள் அடிக்கடி போனில் பேசுவார்கள். ஆனால் அனிருத் தனது கையில் போனையே எடுக்க மாட்டார். அந்த அளவிற்கு வேலையே அவருக்கு சரியாக இருக்கிறது எனவே காதலிக்க எப்படி நேரம் இருக்கும் என ரஜினி கலகலப்பாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்