- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளையராஜா டைரக்‌ஷனில் நடிக்க ஆசைப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், படத்தோட பேரு என்ன தெரியுமா? - இசைஞானியே...

இளையராஜா டைரக்‌ஷனில் நடிக்க ஆசைப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், படத்தோட பேரு என்ன தெரியுமா? – இசைஞானியே பகிரங்கமாக சொன்ன தகவல் இது!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் பொக்கிஷ நடிகராக உச்சத்தில் இருக்கிறார். 73 வயதிலும் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து வேட்டையன் படத்தை முடித்துவிட்டு, இப்போது கூலி படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.

கூலி படத்துக்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் நடிகர் ரஜினிகாந்த் அடுத்து 3 பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இந்த படங்கள் உறுதியான பிறகு டைரக்டர்கள் யார் என்ற விவரங்கள் தெரிய வரும். எனினும் தொடர்ந்து ரஜினி அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கிறார்.

நடிப்பில் ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஸ்டாரை போல, இசையில் ஒரு சக்ரவர்த்தியாக இருந்து வருபவர் இளையராஜா. இருவருக்குமே மிக நெருக்கமான நட்பும், அன்பும் உள்ளது. ரஜினிகாந்த், சாமி என்றுதான் இளையராஜாவை அழைக்கிறார். பதிலுக்கு அவரும் ரஜினியை சாமி என்றுதான் அழைக்கிறார். இருவருமே ஆன்மிகவாதிகளாகவும் தங்களது நெருக்கத்தை தொடர்கின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன், இளையராஜாவை ஒருமுறை நேர்காணல் செய்திருக்கிறார். அப்போது பேசிய இசைஞானி இளையராஜா ஒரு புதிய தகவலை கூறியிருக்கிறார். அதாவது நடிகர் ரஜினிகாந்தே, இளையராஜா டைரக்‌ஷனில் நடிக்க ஆசைப்பட்டு அவரிடம் வந்து இதுபற்றி நேரில் பேசியிருக்கிறார்.

இதுபற்றி இளையராஜா கூறியதாவது, ஒருமுறை நேரில் என்னை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், என் சகோதரர் பாஸ்கருக்கு ஒரு படம் நடித்து தருவதாக அவரே கூறினார். அந்த படத்தை நீங்களே டைரக்ட் செய்ய வேண்டும் என்றும் என்னிடம் கூறினார். மேலும் அந்த படத்துக்கு நீங்களே பெயர் வையுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

நான் அந்த படத்துக்கு ராஜாதி ராஜா என பெயர் வைக்கலாம் என்றேன். ஏன் ராஜாதி ராஜா என்று ரஜினி கேட்டார். நான் ராஜா, என்னை விட பெரிய ஆள் நீங்கள், அதனால் ராஜாதி ராஜா என்றேன். அதற்கு சந்தோஷப்பட்ட ரஜினி, பெயர் நன்றாக இருப்பதாக கூறினார். ராமனாகிய நீங்கள் இயக்க, ராவணனனாகிய நான் நடிக்க இந்த படம் சூப்பராக இருக்கும் என்றார். படப்பிடிப்பு தளத்தில் படம் டைரக்ட் செய்யுபோது ராமன் யார், ராவணன் யார் என்று தெரியும் என்று நான் சொன்னேன். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தை எடுக்க முடியவில்லை என்று இளையராஜா கூறியது, இப்போது வைரலாகி வருகிறது.

சற்று முன்