தென்னிந்திய சினிமாவில் நேஷனல் கிரஷ் என அழைக்கப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் சுல்தான் வாரிசு புஷ்பா புஷ்பா 2 மற்றும் இந்தியில் அனிமல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். சமீபத்தில் நடிகர் தனுஷ் நடித்த குபேரா படத்திலும் ராஷ்மிகா மந்தனா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
ஆனால் குபேரா படம் தெலுங்கில் வரவேற்பை பெற்ற அளவுக்கு தமிழில் பெரிய வரவேற்பை பெறவில்லை. மொத்தமே 17 கோடி ரூபாய்தான் வசூலித்தது. விஜயுடன் வாரிசு கார்த்தியுடன் சுல்தான் படங்களில் ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே நடித்த நிலையில் அந்த 2 படங்களுமே சரியாக போகவில்லை. குபேரா படம் தமிழில் மீண்டும் ஒரு சுற்று வரலாம் என்ற வாய்ப்பை ஏற்படுத்தும் என்று ராஷ்மிகா மந்தனா எதிர்பார்த்தார். குபேரா படமும் ஏமாற்றி விட்டது.
குபேரா படத்தை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்த தி கேர்ள் ஃப்ரெண்ட் என்ற படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் விரைவில் ராஷ்மிகா மந்தனா கலந்து கொள்ள இருக்கிறார். நடிகர் நடிகைகள் தங்களது படங்களின் பிரமோ நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வதன் மூலம் அந்த படங்களுக்கான அதிக வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா பங்கேற்ற ஒரு நேர்காணலில் கூறியதாவது, அனிமல் படத்தில் ரன்பீர் கபூரின் கதாபாத்திரம் குறித்து நான் சொன்ன கருத்துக்களை ஊடகங்கள் தவறான கோணத்தில் சித்தரித்து அதை சர்ச்சையாகி விட்டன. குறிப்பாக நான் சொல்லும் சாதாரண விஷயங்களை கூட தவறாக புரிந்து கொள்வதோடு அதை சர்ச்சையாக்க வேண்டும் என்று திட்டமிட்டே வார்த்தைகளை திரித்து வெளியிடுகிறார்கள்.
நான் சொல்லும் கருத்துக்களை விமர்சன கண்ணோட்டத்தில் பார்ப்பதோடு சோசியல் மீடியாவிலும் ட்ரோல் செய்கிறார்கள். என் கருத்துக்கள் மட்டும் இன்றி அதில் அவர்களது சொந்த கருத்துக்களையும் நான் சொன்னது போன்று சேர்த்து விவாதங்களுக்கு உட்படுத்துகிறார்கள்.
இனி வரும் காலங்களில் ஊடகங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கப் போகிறேன். விமர்சனங்களை ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு கருத்தையும் நான் வெளியிட மாட்டேன் என்று முடிவு செய்து இருக்கிறேன் என்று அந்த நேர்காணலில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆதங்கமாக கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





