- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தில் நடிகர்கள் அதர்வா ரவி மோகனை ஓரம் கட்டி ஜெயித்துக் காட்டிய சிவகார்த்திகேயன் -...

அந்த விஷயத்தில் நடிகர்கள் அதர்வா ரவி மோகனை ஓரம் கட்டி ஜெயித்துக் காட்டிய சிவகார்த்திகேயன் – அட இந்த கோணத்துல யாருமே பார்க்கலையே?

- Advertisement -

ஜெயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவர் ரவி. முதல் படமே மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை கொடுத்தது. அதன்பிறகு அவரது பெயரே ஜெயம் ரவி என மாறிவிட்டது. அவரது அண்ணன் மோகன் ராஜா தான் அந்த படத்தின் இயக்குனர். எடிட்டர் மோகனின் மகன்கள்தான் இருவரும். இப்போது ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டு இருக்கிறார்.

தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி தனி ஒருவன் சந்தோஷ் சுப்ரமணியம் போகன் உனக்கும் எனக்கும் பேராண்மை நிமிர்ந்து நில் என பல வெற்றிப் படங்களை கொடுத்தவர்தான் ஜெயம் ரவி. ஆனால் ஒரு கட்டத்தில் அவரது படங்கள் தொடர்ச்சியான தோல்வியை சந்தித்தன. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான பிரதர் படமும் பிளாப் ஆகி விட்டது.

- Advertisement -

அதே போல் நடிகர் முரளியின் மகன் அதர்வா பாணா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து பாலா இயக்கத்தில் அதர்வா பரதேசி என்ற படத்தில் நடித்தார். நடிப்பின் பல பரிமாணங்களை காட்டி வேற லெவலில் நடித்திருந்தார்.

தொடர்ந்து சண்டி வீரன் ஈட்டி 100 கணிதன் இமைக்கா நொடிகள் என பல படங்களில் நடித்த அதர்வா, பெரிய அளவில் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடிக்க முடியவில்லை. இப்போது அதர்வா, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் பராசக்தி என்ற படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்து வருகிறார். வில்லனாக ரவி மோகன் நடிக்கிறார்.

- Advertisement -

நடிகர் ரவி மோகன் சினிமா பின்புலம் கொண்டவர். அவரது அண்ணன் அப்பா இருவருமே சினிமா துறையை சார்ந்தவர்கள். அதே போல் நடிகர் அதர்வாவும் சினிமா பின்புலத்தை கொண்டவர். ஏனெனில் நடிகர் முரளி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். ஆனால் துரதிஷ்டவசமாக அதர்வா நடிக்க துவங்கிய சில ஆண்டுகளிலேயே மறைந்து விட்டார்.

சினிமா பின்னணி கொண்ட நடிகர்கள் அதர்வா ரவி மோகன் இருவரும் பராசக்தி படத்தில் இதர வேடங்களில் நடிக்கும் நிலையில், சினிமா பின்னணியே இல்லாமல் விஜய் டிவியில் காம்பியராக இருந்து சினிமாவுக்குள் வந்த சிவகார்த்திகேயன், அவர்கள் நடிக்கும் பராசக்தி படத்தின் நாயகனாக இருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு ரவி மோகன் அதர்வா நடித்த படங்களுக்கு மேடையில் காம்பியரிங் செய்த எஸ்கே, இன்று அவர்கள் நடிக்கும் படத்தின் ஹீரோவாக அவர்களை ஓரம் கட்டி ஜெயித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்