- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது திருமணம் குறித்து அனிருத் சொல்வது என்ன? அவரது அப்பா ரவி ராகவேந்தர் சொன்ன சீக்ரட்!

தனது திருமணம் குறித்து அனிருத் சொல்வது என்ன? அவரது அப்பா ரவி ராகவேந்தர் சொன்ன சீக்ரட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளராக அனிருத் இருக்கிறார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு இந்தி கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் பிஸியாக அனிருத் இசையமைக்கிறார். தனுஷ் நடிப்பில் அவரது மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில்தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

தொடர்ந்து பல படங்களில் அனிருத் இசையமைத்த நிலையில் அவரது இசையை ரசிகர்கள் கொண்டாட துவங்கினர். இப்போது நட்சத்திர இசையமைப்பாளராக அனிருத் இசையமைக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்று வருகின்றன. குறிப்பாக ஜெயிலர் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு அனிருத் இசைதான் முக்கிய காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்போது அனிருத்துக்கு 35 வயதுகள் கடந்து விட்டது. ஆனால் இன்னும் அனிருத்துக்கு திருமணம் ஆகவில்லை. இதற்கிடையே அவர் சில நடிகைகள் பாடகிகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். சில நேரங்களில் பிரபல தயாரிப்பாளர் மகளுடன் காதல் என்றும் இணையத்தில் தகவல் பரவியது. ஆனால் அவை எல்லாமே வதந்தியாக போய்விட்டன.

அதனால் அவரது ரசிகர்கள் பலரும் அனிருத்தின் திருமணம் எப்போது என்று தொடர்ந்து கேள்வி கேட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற அனிருத்தின் அப்பா நடிகர் ரவி ராகவேந்தரிடம், உங்கள் மகன் அனிருத் திருமணம் எப்போது என்று கேள்வி கேட்கப்பட்டது.

- Advertisement -

அப்போது ரவி ராகவேந்தர் கூறியதாவது, எந்தப் பையன் தனது அப்பா அம்மாவிடம் வந்து, நீங்கள் எனக்கு பெண் பாருங்க என்று சொல்கிறான் என்று சிலர் சொல்வது உண்டு. பல பெற்றோர்களிடம் பிள்ளைகள் தங்களது திருமணம் பற்றி கேட்பதே இல்லை.

திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்கிறார்கள் தவிர, நான் செய்து கொள்ளவா, நீங்கள் பெண் பார்க்கிறீர்களா என்றெல்லாம் கேட்பதில்லை. அதனால் அனிருத் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் என அதில் ரவி ராகவேந்தர் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்