- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் ரஜினிக்கு ஜோடியாகும் 54 வயது நடிகை, லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்யும் ரஜினி...

மீண்டும் ரஜினிக்கு ஜோடியாகும் 54 வயது நடிகை, லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்யும் ரஜினி 171 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது, தசெ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் 2 வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைய இருக்கிறது. அதன்பிறகு ரஜினி 171 படத்தின் ஷூட்டிங், சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் துவங்க இருக்கிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்கிறார்.

இந்த படத்தில் மாறுபட்ட ரஜினிகாந்தை நீங்கள் பார்க்க முடியும். இதுவரை இல்லாத ஒரு புதிய தோற்றத்தில் ரஜினிகாந்த் இருப்பார் என, ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் பில்டப் செய்திருந்த நிலையில், ரஜினி கேரக்டர் குறித்தான ஆர்வம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

- Advertisement -

வேட்டையன் படத்தை காட்டிலும், ரஜினி 171 மீதான ஆர்வம்தான் ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏனெனில் தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும், சப்ஜெக்ட் ஓரியண்டட் படமாக இருக்கும். ரஜினி ஸ்டைல் இருந்தாலும், இதில் கதைக்கான முக்கியத்துவம் அதிகமாக இருக்கும்.

ஆனால் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் ரஜினி 171 என்பதால், இது முழுமுழுக்க ஹீரோவை மையப்படுத்திய கதையாக, ஹீரோயிசம் அதிகமுள்ள கதையாக, ரசிகர்களின் சந்தோஷத்தை மையப்படுத்திய காட்சியமைப்புகளே அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

- Advertisement -

இந்த படத்தில் இந்தி நடிகர் ரன்வீர் சிங் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ராகவா லாரன்ஸ் கேரக்டரும் வில்லன்தான் என்கின்றனர். இதுதவிர சிவகார்த்திகேயன், ஜீவன் போன்றவர்களும் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் நாயகி நயன்தாரா என்று ஆரம்பத்தில் கூறப்பட்ட நிலையில், இப்போது அதில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.

அதாவது, ரஜினி 171 படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போவது, நடிகை ஷோபனா. இவர் மணிச்சித்திரத்தாழ் என்ற மலையாள படத்தில் நடித்த சந்திரமுகி கேரக்டரை தான், ஜோதிகா தமிழில் சந்திரமுகி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷோபனா ஏற்கனவே தளபதி, சிவா ஆகிய படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்போது 32 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் ரஜினிக்கு ஜோடி சேர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்