- Advertisement -
Homeபொழுதுபோக்குமாஸ் ஹிட் படத்தில் நடித்த தமிழ் வில்லன் நடிகர், கடைசி நேரத்தில் அவர் நடித்த காட்சிகள்...

மாஸ் ஹிட் படத்தில் நடித்த தமிழ் வில்லன் நடிகர், கடைசி நேரத்தில் அவர் நடித்த காட்சிகள் திடீர் நீக்கம்- இயக்குனர் பதில் சொல்வாரா?

- Advertisement -

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் உன்னி முகுந்தன். மலையாளத்தில் பல வெற்றிப் படங்களை தந்திருக்கிறார். கடந்தாண்டில் தமிழில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கிய கருடன் என்ற படத்தில் சூரியுடன் உன்னி முகுந்தன் நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு நண்பராக நடிகர் சசிகுமார் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் ஹனீப் அடேனி இயக்கத்தில் மார்கோ என்ற படம் கடந்த டிசம்பர் மாதம் 20ம் தேதி வெளியானது. இந்த படத்தில் உன்னி முகுந்தன் நாயகனாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் யுக்தி தரேஜா சித்திக் ஜெகதீஷ் அபிமன்யு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

- Advertisement -

அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த ஆக்சன் படமான இது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் உலக அளவில் மிகப்பெரிய வெற்றி மார்கோ படத்துக்கு கிடைத்துள்ளது. இந்த படம் உலக அளவில் இதுவரை 100 கோடி ரூபாய் வசூலித்து வெற்றி நடை போட்டு வருகிறது.

தமிழில் பல படங்களில் வில்லனாக நடித்தவர் ரியாஸ்கான். விஜய் நடித்த பத்ரி படத்தில் அவரது அண்ணனாக ரியாஸ்கான் நடித்திருப்பார். மேலும் வின்னர் படத்தில் வடிவேலுவுடன் போன மாசம்தானே உன்னை அடித்தேன் என்று டயலாக் பேசி காமெடி காட்சியில் நடித்திருந்தவர்தான் ரியாஸ் கான். இவர் பல தமிழ் படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

சம்சாரம் அது மின்சாரம் அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட பல படங்களில் நடித்த குணச்சித்திர நடிகை கமலாகாமேஷ் மகள் உமா தான், ரியாஸ்கானின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது சமீபத்தில் ரியாஸ்கானின் தாயார் இறந்த நிலையில், உமா ரியாஸ்கானின் அம்மா கமலா காமேஷ் இறந்துவிட்டதாக இணையத்தில் தவறான தகவல் பரவியது. பிறகு இது குறித்து அவரது மகள் உமா ரியாஸ்கான் விளக்கம் அளித்து அம்மா நலமுடன் இருக்கிறார் என்றும் தெரிவித்திருந்தார்.

மாஸ் ஹிட் படமான மார்கோ படத்தில் நடிகர் ரியாஸ்கான் நடித்திருக்கிறார். ஆனால் அவர் நடித்த காட்சிகள் எதுவும் படத்தில் வரவில்லை. இதுகுறித்து நடிகர் ரியாஸ்கான் கூறியதாவது, ஒரு படத்தில் இருந்து நான் நடித்த காட்சிகள் நீக்கப்படுவது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது. அதுவும் ஒரு மாபெரும் வெற்றி படத்தில் இருந்து ஒரு நடிகர் நடித்த காட்சிகளை முற்றிலும் நீக்குவது பெரிய மனவேதனையை கொடுக்கும். உலகம் முழுவதும் பேசப்படும் ஒரு படத்தில் நான் இருந்தேன். ஆனால் இப்போது இல்லை. மார்கோ படத்தில் நான் நடித்த காட்சிகள் அனைத்தும் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டு விட்டன என்று கூறியிருக்கிறார். எதற்காக அவரது காட்சிகள் நீக்கப்படன என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்