விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் பாலா. கேபிஒய் பாலா என்று அழைக்கப்படுகிறார். தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளில் பொது நிகழ்ச்சிகளில் கல்லூரி விழாக்களில் செலிபரட்டியாக பங்கேற்று வருகிறார். சினிமாவிலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
சினிமாவில் நூறு கோடிகளில் சம்பளம் வாங்கும் ராகவா லாரன்ஸ் தவிர்த்து பல நடிகர்கள், இயக்குனர்கள் மக்கள் மீது அக்கறை இல்லாமல் உள்ள நிலையில், கேபிஒய் பாலா, தனது சொற்ப வருமானத்தில் ஏழை எளிய மக்களுக்கு பலவிதமான உதவிகளை செய்து வருகிறார். இலவச ஆம்புலன்ஸ்கள் ஆட்டோ பைக் என பலருக்கும் வாங்கிக்கொடுத்து உதவுகிறார்.
தேவைப்படுபவர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்கிறார். மழை வெள்ளம் ஏற்படும் காலகட்டத்தில் தன் கையிருப்பில் உள்ள மொத்த பணத்தையும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செலவு செய்கிறார். இப்படி அவர் தனக்கு வரும் வருமாத்தில் பெரும்பகுதியை மக்களுக்காக உதவுவதற்கு பயன்படுத்துவதால் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் கேபிஒய் பாலா கூறியதாவது, இதுவரை நான் 18 படங்களில் நடித்திருக்கிறேன். டைட்டில் கார்டில் என்னுடைய பெயர் வரும். அந்த படத்திலும் நடித்திருப்பேன். ஆனால் அந்த போர்ஷனை எடிட் செய்து தூக்கி விடுவார்கள். இது போல பலமுறை எனக்கு நடந்திருக்கிறது.
இயக்குனர் நடிகர் ஆர்ஜே பாலாஜி அண்ணா ஒருமுறை என்னுடைய படத்தை பார்த்துவிட்டு டைட்டிலில் உன்னுடைய பெயரை பார்த்தேன். ஆனால் படத்தில் உன்னுடைய போர்ஷனே வரவில்லையே என்று கேட்டார். நானும் ஆமாம் அண்ணா என்று சொல்லி வருத்தப்பட்டேன்.
அப்போது அவர் உனக்காக வாய்ப்பு ஒன்று உன்னை தேடி வரும். அதுவரை நீ சின்ன சின்ன கேரக்டர்களில் எல்லாம் நடிக்க வேண்டாம் என்று கூறினார். அதன் பிறகு தான் 5 ஆண்டுகளாக எந்த படத்திலும் நான் நடிக்கவே இல்லை. அவர் சொன்னதை நான் பாலோ அப் பண்ணி வருகிறேன் என்று நடிகர் கேபிஒய் பாலா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





