- Advertisement -
Homeபொழுதுபோக்குஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியாகும் அடுத்த படம்; பார்வையாளர்களை மிரட்டிய சொர்க்கவாசல் படத்தின் டீசர் -...

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியாகும் அடுத்த படம்; பார்வையாளர்களை மிரட்டிய சொர்க்கவாசல் படத்தின் டீசர் – தரமான சம்பவமா தெரியுதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் ஆர் ஜே பாலாஜி. துவக்கத்தில் ரேடியோ ஜாக்கியாக இருந்த அவர், அதன் பிறகு சினிமாவில் சின்ன சின்ன கேரக்டர்களில், காமெடி ரோலில் சில படங்களில் நடித்தார். அவரது நான் ஸ்டாப் பேச்சை ரசிகர்கள் வெகுவாக ரசிக்க ஆரம்பித்தனர். அதனால் தொடர்ந்து பட வாய்ப்பை ஆர்ஜே பாலாஜி.

அதன் பிறகு ஆர்ஜே பாலாஜி நடித்த எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம், சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட படங்கள் அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது. குறிப்பாக நானும் ரவுடிதான், ரன் பேபி ரன், புகழ், ஜில் ஜங் ஜக், தேவி போன்ற படங்கள் ஆர் ஜே பாலாஜிக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன.

- Advertisement -

இவர் ரேடியோ ஜாக்கியாக மட்டுமின்றி கிரிக்கெட் போட்டியில் தனக்கே உரித்தான கிண்டலான பாணியில் வர்ணனையாளராகவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். நான் ஸ்டாப்பாக இவர் மூச்சு விடாமல் கலாய்த்து பேசுவதில் சிறந்தவராக இருக்கிறார். அதுவே ஆர்ஜே பாலாஜியின் சிறந்த அடையாளமாகவும் இருந்து வருகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் 69 படத்தை இயக்க, ஆர்ஜே பாலாஜி கதை சொன்னார். அந்த கதை விஜய்க்கு பிடித்திருந்தாலும், நான் இந்த கதையில் நடித்தால் அது சரியாக வராது என்று மறுத்துவிட்டார். அதனால் இப்போது அந்த கதையில் நடிகர் சூர்யா நடிக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் படத்தை தொடர்ந்து, சூர்யாவின் 45வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில், நடிகர் ஆர்.ஜே பாலாஜி சொர்க்கவாசல் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன்தினம் வெளியானது. இயக்குனர் பா ரஞ்சித் சொர்க்கவாசல் படத்தின் போஸ்டரை வெளியிட்டார். பா ரஞ்சித்தின் உதவி இயக்குனர் சித்தாத் விஸ்வநாதன் சொர்க்கவாசல் படத்தை இயக்கியுள்ளார். ஸ்வீப் ரைட் ஸ்டுடியோ தயாரித்துள்ள இந்த படத்தின் கதையை இயக்குனருடன் தமிழ் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து எழுதியுள்ளனர்.

சொர்க்கவாசல் படத்தின் டீசரை இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் வலைதளத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். மத்திய சிறைச்சாலையை மையமாக வைத்து 1999ம் ஆண்டில் நடக்கும் கதைக்களத்தை கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இதில் செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் மிரட்டலாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் சொர்க்கவாசல் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சொர்க்கவாசல் டீசர் : https://www.youtube.com/watch?v=JXgWmuiOLbo

- Advertisement -

சற்று முன்